பக்கம் எண் :

270தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

பிரகார வாயில் இடித்துக் கட்டப்பட்டது. சபா மண்டபம்
வீரபாண்டியன்
(1253-1268) காலத்தில் கட்டப்பட்டது. சிற்பங்கள்
மிகுதியாக உள்ள ஆயிரங்கால் மண்டபமும் வசந்த மண்டபமும்
கி.பி. 17ஆம் நூற்றாண்டில் நாயக்கர்கள் ஆட்சியில்
உருவாக்கப்பட்டவை எனப்படுகிறது. புதுக்கோட்டை மன்னர்
இராமச்சந்திரத் தொண்டைமான் இக்கோவிலில் கி.பி. 1865இல்
குடமழுக்கு விழா நடத்தினார்.

குடுமியான் மலைக் கோவிலின் இறைவன் குடுமிநாதர்
அல்லது சிகாகிரீஸ்வரர் எனப்படுகிறார். கருவறையிலுள்ள லிங்கத்தில்
குடுமி இருப்பது போன்ற அமைப்பு உள்ளது. இறைவி
அகிலாண்டேஸ்வரி அம்மன்
எனப்படுகிறார்.

சிற்ப விருந்து

கோவிலின் கோபுரவாயிலை அடுத்து ஆயிரம் கால்
மண்டபமும்,
இதையடுத்து வசந்த மண்டபமும் உள்ளன.
கோவிலின் வாயிலில் நுழைந்த ஒருவர், இறைவனின் சந்நிதி
முன்மண்டபம் செல்லும்வரை, முன்கூறிய இருமண்டபங்களின்
இருபுறமும் அழகிய சிற்பங்களைக் காணலாம். இதைச் ‘சிற்ப
விருந்து’
என்று கூறலாம். ஆயிரம் கால் மண்டபத்தில்
விஷ்ணுவின் சில அவதாரங்கள்
-வராக அவதாரம், கூர்ம
அவதாரம், கல்கி அவதாரம், மச்சாவதாரம், நரசிம்ம அவதாரம்
ஆகியவை-விபீஷணன், சுக்ரீவன், வாலி, அனுமன், மன்மதன்,
குதிரைவீரன், பூச்சிநாயக்கர் என்னும் பெயர்களைக்கொண்ட
சிற்பங்கள் ஆகியவை உள்ளன. வசந்த மண்டபத்தில் வல்லப
விநாயகர், சங்கர நாராயணன், அகோர வீரபத்திரர்,
மகிஷாசுரமர்த்தினி, காளி, திருமால், ஆறுமுகம், நரசிம்ம
அவதாரம், வீரபத்திரர், ஊர்த்துவதாண்டவம் ஆகிய
திருவுருவங்களைக்கொண்ட சிற்பங்களும், இராமபிரான்,
இலக்குவன், இராவணன், மன்மதன், ரதிதேவி, முசுகுந்தன்,
புரூரவன், கண்ணப்ப நாயனார், காங்கேயன், மோகினி ஆகிய
பெயர்களைக் கொண்ட சிற்பங்களும் உள்ளன.

17ஆம் நூற்றாண்டில் நாயக்கர் ஆட்சிக் காலத்தில்
உருவான இச்சிற்பங்கள் ஒற்றைக் கல்லினாலானவை. சமயச்
சிறப்பும்,