பக்கம் எண் :

பண்பாட்டுச் சின்னங்களும்271

கலைச்சிறப்பும் மிக்கவையாக உள்ளன. ஆயிரம் கால்
மண்டபச் சிற்பங்களைவிட, வசந்த மண்டபச் சிற்பங்கள்
வனப்புமிக்கவையாகக் கருதப்படுகின்றன. இச்சிற்பங்கள்
நமது அரிய கலைச் செல்வங்களாகும்.


குகைக் கோவில்

குடுமிநாதர் கோவிலின் மேற்கில், மேலைக் கோவில்
எனப்படும் குடைவரைக் கோவில் உள்ளது. இக்கோவில்
குடுமியான் மலையின் அடிவாரத்தைக் குடைந்து
உருவாக்கப்பட்டதாகும். இக்கோவில் குடுமிநாதர் கோவிலைவிடக்
காலத்தால் முந்தியதாகும். இக்கோவில் பல்லவர் குடைவரை அல்ல
என்றும், இது பாண்டிய மன்னர் காலத்துப் பணி என்றும்
கொள்ளப்படுகிறது. கி.பி. 8ஆம் நூற்றாண்டிற்குரியது
எனப்படுகிறது. கருவறையில் லிங்க வடிவில் காணப்படும் இறைவன்
மலைக் குழைந்த நாதர்
அல்லது ஜெயந்தவனேஸ்வரர்
எனப்படுகிறார். கருவறை முன் மண்டபச் சுவர்களில்
சண்டிகேஸ்வரர், சோமாஸ்கந்தர், வலம்புரி விநாயகர்

திருவுருவங்களும், துவாரபாலகர் சிற்பங்களும் உள்ளன.
மலைப்பாறையைக் குடைந்து உருவாக்கப்பட்டுள்ள இச்சிற்பங்கள்
அரிய கலைப்படைப்புகள்
ஆகும். குகைக் கோவில் முன்னுள்ள
மண்டபம் முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில்
கட்டப்பட்டதாகும். முன் மண்டபத்தில் புதுக்கோட்டை
மன்னரின் திருப்பணியும் உள்ளது.

குகைக் கோவிலுக்கு அருகில் சௌந்திர நாயகி அம்மன்
கோவில் உள்ளது. வீரபாண்டியன் ஆட்சிக் காலத்தில்
(கி.பி. 13ஆம் நூற்றாண்டு) தேவரடியார்களில் ஓருவரான
துக்கையாண்டி மகள் நாச்சி
என்பவரால் இக்கோவில்
எழுப்பப்பட்டது.

குகைக் கோவிலுக்குத் தெற்கில் மலைப்பாறையில்
விநாயகரின் திருஉருவம் புடைப்புச் சிற்பமாகக் காட்சியளிக்கிறது.
இத்திரு உருவத்தின் அருகில் புகழ்பெற்ற இசைக் கல்வெட்டு
உள்ளது. இக்கல்வெட்டு கி.பி. 1904ஆம் ஆண்டு
கண்டுபிடிக்கப்பட்டது. பல்லவக் கிரந்த எழுத்துகளாலான
இக்கல்வெட்டு தமிழ் இசை இலக்கணத்தையும், யாழினையும்
உணர்த்துகிறது. இசைக் கல்வெட்டைத் தவிர மேலும் 100-க்கு