பக்கம் எண் :

272தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

மேற்பட்ட கல்வெட்டுக்கள் குடுமியான் மலைக்கோவிலில் உள்ளன.
இவை இப்பகுதி மக்களின் சமூக, சமய வாழ்க்கை பற்றிய முக்கியச்
செய்திகளைத் தெரிவிக்கின்றன.

மலை உச்சியில் முருகன் கோவில் உள்ளது.

குடுமியான் மலைக்கோவில் தமிழ் மக்களின் சிறந்த
மரபுரிமைச் செல்வமாகும்.

மலையடிப்பட்டி: புதுக்கோட்டையிலிருந்து 38 கி.மீ.
தொலைவில் மலையடிப்பட்டி உள்ளது. இது முத்தரையர்களின்
தலைமையிடமாக விளங்கிற்று. இங்குள்ள திருவாலத்தூர்
மலையை, நந்திவர்ம பல்லவ மன்னன் ஆட்சிக் காலத்தில்,
விடேல் விடுகு முத்தரையன்
என்னும் குவாவஞ் சாத்தன்
என்பவர் குடைந்து குகைக் கோவிலை அமைத்தார். விஷ்ணுவுக்கு
ஒரு குகைக் கோவிலும், சிவனுக்கு ஒரு குகைக்கோவிலும்
உள்ளன. மலையடிப்பட்டி குகைக் கோவில் முத்தரையர்களின்
கோவிற் கலைப்பணிக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

புதுக்கோட்டை நகரிலிருந்து 25 கி.மீ. தொலைவிலுள்ள
குன்னாண்டார் கோவிலில் சிவனுக்கான குடைவரைக் கோவில்
உள்ளது. இக்குடைவரைக் கோவிலும் முத்தரையர்களின் கலைப்
பணியாகும்.

நார்த்தமலை

புதுக்கோட்டை நகரிலிருந்து 17 கி.மீ. தொலைவில்
நார்த்தமலை
என்ற சிற்றூர் உள்ளது. இவ்வூரைச் சூழ்ந்து 8
சிறிய மலைகள் உள்ளன. இப்பகுதியை கி.பி. 7-9 நூற்றாண்டுகளில்
முத்தரையர்கள் என்பவர்கள் பல்லவர்களுக்கு உட்பட்டு ஆட்சி
புரிந்தனர். நார்த்தமலை கிராமத்திலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில்
மேல மலைமீது விஜயாலய சோழீஸ்வரம் என்ற கோவில் உள்ளது.
இக்கோவிலின் வெளிப்புறச் சுவரில் காணப்படும் கல்வெட்டுமூலம்
இக்கோவில் சாத்தன் பூதி என்பவரால் கட்டப்பட்டதாகவும்,
மழையினால்