பக்கம் எண் :

பண்பாட்டுச் சின்னங்களும்273

இது இடிந்துவிடவே, மல்லன் விடுமன் என்பவர் இதை விஜயாலய
சோழன் காலத்தில் புதுப்பித்தார் என்றும் அறியப்படுகிறது.
விஜயாலயன் காலம் முதல் இக்கோவில் விஜயாலய சோழீஸ்வரம்
என்று வழங்கப்பட்டு வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

விஜயாலய சோழீஸ்வரம் ஒரு சிவாலயமாகும். இது தமிழகக்
கோவில் அமைப்பிலே தனித்தன்மை வாய்ந்ததாகக் கருதப்படுதிறது.
மூலவரை அடுத்துள்ள உட்சுவர், வட்ட வடிவில் உள்ளது.
இதையடுத்த வெளிச்சுவர் சதுரவடிவில் உள்ளது. உட்பிரகாரச்
சுவர்களில் பண்டைய ஓவியங்கள் அழிந்த நிலையில்
காணப்படுகின்றன.

கருவறைமீது அழகிய விமானம் எழுப்பப்பட்டுள்ளது.
இது அதிட்டானம்முதல் உச்சிவரை கல்லாலானது. இது
கட்டுமான கற்கோவிலாகும். இது காஞ்சி கைலாசநாதர்
கோவில் விமானத்தின் தோற்றத்தைக் கொண்டுள்ளது.

கோவில் விமானத்தைச் சுற்றி எட்டு துணை ஆலயங்கள்
இருந்தன எனப்படுகிறது. இவற்றில் ஆறு ஆலயங்கள் இப்பொழுது
நல்ல நிலையில் உள்ளன. ஆனால், இவற்றில் தெய்வங்கள்
வழிபாட்டிற்கு இல்லை.

விஜயாலய சோழீஸ்வரர் கோவிலுக்கு எதிரில் நார்த்த
மலையில் மேல் மலைக்குன்றின் அடிவாரத்தில் இரு குடைவரைக்
கோவில்கள்
உள்ளன. ஒரு கோவிலின் கருவறையில் தெய்வம்
எதுவும் தற்பொழுது இல்லை. இக்கோவிலின் வெளிமண்டபச்
சுவரில் விஷ்ணு சிற்பங்கள் 12 வரிசையாக வடிக்கப்பட்டுள்ளன.
இவை ஓவ்வொன்றும் 2 மீட்டர் உயரத்தைக் கொண்டுள்ளது. 12
திருவுருவங்களும் தோற்றத்தில் ஒன்றுபோல் காட்சியளிக்கின்றன.
இத்திருவுருவங்களில் காணப்படும் அணிகலன்களின் அமைப்பு,
சிற்பக்கலைச் சிறப்புமிக்கது. விஷ்ணு சிற்பங்களுக்கு எதிரில்
முற்றுப் பெறாநிலையில் அதிட்டானத்துடன் காணப்படும்
கட்டடப்பகுதி உள்ளது. முதன் முதலில் இக்கோவில் சமணர்
வழிபாட்டுத்தலமாக இருந்ததென்றும், மாறவர்மன்