பக்கம் எண் :

274தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

சுந்தரபாண்டியன் ஆட்சிக் காலத்தில் (கி.பி. 1228) இது
விஷ்ணு கோவிலாக மாற்றப்பட்டது என்றும் கூறப்படுகிறது.
‘பதினெண்பூமி விண்ணகரம்’ என்றும் இக்கோவில்
அழைக்கப்படுகிறது.

விஷ்ணு கோவிலுக்கு அருகில் மற்றொரு குடைவரைக்
கோவில் உள்ளது. இது ‘பழியிலி ஈஸ்வரம்’ எனப்படுகிறது.
சிவனுக்காக வடிக்கப்பட்டதாகும். இது கி.பி. 9ஆம் நூற்றாண்டில்
சாத்தம் பழியிலி என்ற முத்தரையர் தலைவனால்
உருவாக்கப்பட்டது.

குகைக் கோவிலின் முன் மண்டபத்துச் சுவரில் உள்ள
கல்வெட்டு சாத்தம் பழியிலியால் இக்குகைக் கோவில்
அமைக்கப்பட்டதையும், இவர் மகள் பழியிலி சிறிய நங்கை
இதில் முகமண்டபம் அமைத்ததையும் குறிப்பிடுகிறது.
முத்தரையர்களின் கோயிற் கலைப்பணிக்கு இக்கோவில்
ஓர் எடுத்துக்காட்டாகும்.

கொடுமபாளூர்

புதுக்கோட்டை நகரிலிருந்து மணப்பாறை செல்லும்
சாலையில் 40 கி.மீ. தொலைவில் (திருச்சியிலிருந்து 37 கி.மீ.)
கொடும்பாளூர் உள்ளது.

கொடும்பாளூரைத் தலைநகராகக்கொண்டு இருக்குவேளிர்
என்ற குறுநில மன்னர்கள் ஆண்டனர். அவர்கள் தஞ்சைச்
சோழர்களின் நெருங்கிய உறவினர்களாகவும் அவர்களுக்கு உறுதுணையா
கவும் வாழ்ந்தனர். அவர்களில் பூதி விக்கிரமகேசரி
என்னும் மன்னர் கி.பி. 10ஆம் நூற்றாண்டில் ஒரு கோயில்
எடுப்பித்தார். இக்கோவிலுக்கு விக்ரம கேசரீச்சுரம் என்று பெயர்.
இக்கோவில் தற்பொழுது மூவர் கோவில் எனப்படுகிறது. இக்கோவில்
சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மூவருக்காக எழுப்பப்பட்டதாகும்.
கோவிலின் மூன்று விமானங்களும் ஒரே திருச்சுற்றில்
கட்டப்பட்டுள்ளன. மூன்றும் ஒரே அளவினதாகும். பூதி தன்
பெயராலும் தன் மனைவியர் இருவர் பெயராலும் இம்மூன்று,
விமானங்களையும் எழுப்பினார்