என்று கல்வெட்டிலிருந்து அறியப்படுகிறது. மூன்று விமானங்களில்
ஒன்று இடிந்துவிட்டது. இரண்டு மட்டும் எஞ்சியுள்ளன. இடிந்த
விமானத்தின் அழகிய சிற்பங்கள் இங்கு காட்சிப் பொருள்களாக
வைக்கப்பட்டுள்ளன.
மூவர் கோவிலைத் தவிர கொடும்பாளூரில் வேறு சில
கோவில்களும் உள்ளன. அவற்றுள் ஒன்று முசுகுந்தீஸ்வரர்
கோவிலாகும். இது கி.பி. 10ஆம் நூற்றாண்டில் எழுந்தது.
தஞ்சைச் சோழர்களின் திருப்பணிகளைக் கொண்டுள்ளது.
கொடும்பாளூரிலிருந்து 6 கி.மீ. தொலைவில்
விராலிமலை
உள்ளது. இம்மலையில் சுப்ரமணிய சுவாமி என்ற முருகன்
கோவில் உள்ளது. இக்கோவிலைப் பெரம்பூரைச் சேர்ந்த
அழகிய மணவாளத் தேவர் என்பவர் கட்டியதாகக் கூறப்படுகிறது.
புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாதத் தொண்டைமானிடம்
அமைச்சராகப் பணியாற்றிய சுப்ரமணிய முதலியார் இக்கோவிலில்
அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். அருணகிரிநாதர் இங்கு
வருகை தந்துள்ளார். இங்குள்ள முருகன் ஆறுமுகத்துடன்
மயில்மீது அமர்ந்துள்ளார். முருகனின் அருகில் வள்ளியும்
தேவசேனாவும் நிற்கும் அழகிய காட்சியை இங்குக் காணலாம்.
திருமயம்
புதுக்கோட்டை நகரிலிருந்து 20 கி.மீ. தொலைவில் திருமயம்
உள்ளது. இவ்வூரின் பெருமைக்குரிய அம்சங்கள் 1. கோட்டை,
2. மலையடிவாரத்திலுள்ள சிவ, விஷ்ணு வழிபாட்டுத் தலங்கள்
ஆகும்.
திருமயம் கோட்டை கி.பி. 1687இல் இராமநாதபுர சேதுபதி
விஜயரகுநாதரால் எழுப்பப்பெற்றதாகும். இப்பகுதி கி.பி. 1723
முதல் புதுக்கோட்டை மன்னர் ஆட்சிக்குட்பட்டிருந்தது. திருமயம்
ஊரைச் சுற்றி எழுப்பப்பட்ட கோட்டையின் ஒரு பகுதி
அழிந்துவிட்டது. கோட்டையின் அகழிகள் நிரப்பப்பட்டுத்
தெருக்கள் எழுந்துள்ளன. கோட்டையின் வாயில் இன்றும் நாம்
காணும்படி உள்ளது. மலைமீதும் கோட்டை உள்ளது.
மலைக்கோட்டையின் வாயிலிலிருந்து மலை உச்சிக்குச்
|