செல்லும் வழியில் சுமார் பாதி உயரத்தில் மலையைக்
குடைந்து அமைக்கப்பட்டுள்ள லிங்கம் உள்ளது. இரும்புக்
கம்பிகளினாலான ஏணியின்மீது ஏறி இந்த லிங்கத்தைக்
காணும்படியாக உள்ளது.
மலையின் அடிவாரத்தில்
சத்தியகிரீஸ்வரர் கோவிலும்,
அதையடுத்து சத்தியமூர்த்திப் பெருமாள் கோவிலும் உள்ளன.
இரண்டு கோவில்களுக்கும் இடையிலுள்ள தொலைவு 15 மீட்டர்தான்.
ஒரு காலத்தில் இவ்விரு சந்நிதிகளுக்கும் இடையில் எவ்விதத்
தடுப்புச்சுவரும் இல்லாமலிருந்ததென்றும் இரண்டிற்கும் ஒரே
நுழைவு வாயில் இருந்ததென்றும் தெரிய வருகிறது.
சைவர்களுக்கும் வைணவர்களுக்குமிடையில் பூசல்கள் ஏற்பட்டபின்
இவ்விரு சந்நிதிகளுக்கும் இடையில் தடுப்புச் சுவர்கள் எழுந்தன
எனப்படுகிறது.
சத்தியகிரீஸ்வரரின் கருவறையும், சத்திய மூர்த்திப்
பெருமாளின் கருவறையும் திருமயம் மலையின் அடிவாரத்தைக்
குடைந்து அமைக்கப்பட்டனவாகும். சத்தியகிரீஸ்வரர் கருவறையில்
லிங்க வடிவில் காட்சி தருகிறார். கருவறை, கருவறை முன்னுள்ள
மண்டபம், நந்தி, சுவர்ப்பகுதியிலுள்ள லிங்கோத்பவரின்
திருவுருவம் ஆகிய யாவும் மலையைக் குடைந்து
அமைக்கப்பட்டவையாகும். இவை அற்புதச் சிற்பப் படைப்புகள்
ஆகும். இறைவி வேணுவனேஸ்வரி எனப்படுகிறார்.
கல்யாணமண்டபம் முத்துக்கருப்பன் செட்டியார்
என்பவரின் திருப்பணியாகும்.
சத்தியமூர்த்திப் பெருமாள் சந்நிதியும் மலையைக்
குடைந்து உருவாக்கப்பட்டதாகும். இங்கு அருள்தரும் பெருமாளின்
சயனத் திருக்கோலம் கண்கொள்ளாக் காட்சியாகும். சுமார்
10 மீட்டர் நீளமுள்ள பெருமாளின் திருக்கோலம், பெருமாளின்
தலைப்பகுதியிலுள்ள நாகத்தின் உருவம், பெருமாள்
மார்பின்மீது அமர்ந்துள்ள லட்சுமி, பெருமாளின் காலடியிலுள்ள
பூமிதேவி, பெருமாளின் திருவுருவத்திற்கு உயரே காணப்படும்
பிரம்மா, கருடன், சித்ரகுப்தன், மார்க்கண்டேயர், சூரியன்,
சந்திரன், வருணன், நாரதர், தும்புரு, குரு, பிருகு முனிவர்கள்
ஆகிய சிற்பங்கள் யாவும் மலைப்பாறையைக் குடைந்து
|