அமைக்கப்பட்டவையாகும். அரவணையில் கிடந்தப் பெருமாள்
உலகை உய்விப்பதற்காக நாபிக் கமலத்திலிருந்து நான்முகனைப்
படைக்கும் புராணச் சிற்பக்காட்சி நன்கு செதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திலுள்ள குகைச் சிற்ப அதிசயங்களில் இது ஒன்றாகும்.
இக்கோவிலில் உஜ்ஜிவனத்தாயாரின் சந்நிதி ஸ்ரீகிருஷ்ணர்
சந்நிதி, ஸ்ரீஆண்டாள் சந்நிதி, ஸ்ரீராமர் சந்நிதி ஆகிய
சந்நிதிகளும் உள்ளன. ஸ்ரீகிருஷ்ணர் சந்நிதி முன்னுள்ள
மண்டபத்தில் ஒற்றைக் கல்லினாலான இராமர், லட்சுமணர்
சிற்பங்களும் குறவன், குறத்தி சிற்பங்களும் உள்ளன.
கி.பி. 8ஆவது நூற்றாண்டில் பெருமாளின் குகைக் கோவில்
சாத்தன் மாறனின் தாயர் பெரும்பிடுகு பெருந்தேவியால்
அமைக்கப்பட்டதாகும். இக்கோவில் ‘ஆதிரங்கம்’ என்ற
பெயரைப் பெற்றுள்ளது.
சத்தியகிரீஸ்வரர் கோவில் குருக்களுக்கும், சத்தியமூர்த்தி
பெருமாள் கோவில் குருக்களுக்கும் இடையில் கோவில்
நிலங்களின் வருவாயைப் பகிர்ந்துகொள்வதில் தகராறு
ஏற்பட்டதாகவும், வீரசோமேஸ்வரன் என்ற ஓய்சள மன்னனின்
தளபதியான அப்பண்ணத் தண்டநாயகன் தலைமையிலான நீதிக்குழு,
இந்த வழக்கினை விசாரித்துத் தீர்ப்பளித்ததாகவும் (கி.பி. 1245)
இங்குள்ள ஒரு கல்வெட்டிலிருந்து அறியப்படுகிறது.
திருமயத்திலுள்ள எஞ்சிய கோட்டைப் பகுதிகள்,
மலையடி வாரத்திலுள்ள சிவன், விஷ்ணு கோவில்கள்
ஆகியவை நமது பண்பாட்டின் பெருமைக்குரிய முக்கிய
சின்னங்களாகும்.
திருமயம்-திருப்பத்தூர் சாலையில் திருமயத்திலிருந்து 7
கி.மீ. தொலைவில் இஸ்லாமியரின் புனிதத்தலம் ஒன்று உள்ளது.
இது காட்டு பாவா பள்ளிவாசல் என்படுகிறது. இங்கு
கி.பி 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சையது பாவா பக்ருதீன்
என்ற இஸ்லாமியப் பெரியாரின் கல்லறை உள்ளது. அழகிய
குவிமாடங்களையும், கோபுரங்களையும்கொண்டு விளங்குகிறது.
ஆர்க்காட்டு நவாபான முகமதலி வாலாஜா இத்தலத்தைக்
கொடையாகக் கொடுத்துள்ளார். புதுக்கோட்டைத்
தொண்டைமான்களும், இராமநாதபுர சேதுபதிகளும்
இத்தலத்திற்குச்
|