சொத்துகள் வழங்கினர். நாகூரைப்போல, இத்தலம்,
இந்து-இஸ்லாமியர் ஒருமைப்பாட்டிற்கு ஒரு சின்னமாக
விளங்குகிறது.
ஆவுடையார் கோவில்
புதுக்கோட்டை நகரிலிருந்து 44 கி.மீ. தொலைவில்
திருப்பெருந்துறை என்ற இடம் உள்ளது. இது ஆவுடையார்
கோவில் என் அழைக்கப்படுகிறது. இது ஒரு புகழ்மிக்க சிவ
வழிபாட்டுத்தலம் ஆகும்.
திருவாசகத்தை இயற்றிய மாணிக்கவாசகர் சைவ
சமயாச்சாரியார்கள் நால்வரில் ஒருவர் ஆவார். கி.பி. 9ஆம்
நூற்றாண்டில் மதுரையில் ஆட்சிபுரிந்த வரகுண பாண்டியன்
என்ற மன்னரிடம் இவர் அமைச்சராகப் பணியாற்றினார். இவர்
ஒரு சிறந்த சிவபக்தராக விளங்கினார். இவர், பாண்டிய மன்னர்
தம்மிடம் குதிரைகள் வாங்கக் கொடுத்த பணத்தைத்
திருப்பெருந்துறையில் தங்கிச் சிவ புண்ணியச் செயல்களில் செலவு
செய்தார். ஆவுடையார் கோவிலைக் கட்டும் திருப்பணியில்
ஈடுபட்டார். இறைவனின் திருவிளையாடல்கள் சில
மாணிக்கவாசகர் வாழ்க்கையில் நடைபெற்றனவாகப் புராணச்
செய்திகள் உள்ளன.
இன்றைய ஆவுடையார் கோவில் பகுதியில்
குருந்தமரத்தினடியில், சிவபெருமான் குருவாக இருந்து
மாணிக்கவாசகருக்கு உபதேசம் செய்ததாகப் புராணம் கூறும்.
மாணிக்கவாசகரின் திருப்பணியைக்கொண்ட ஆவுடையார்
கோவிலில், இக்கோவில் வட்டாரத்தைச் சேர்ந்த
நிலக்கிழார்கள்
பலரின் திருப்பணிகள் உள்ளன. மாணிக்கவாசகர் சந்நிதி
முன்னுள்ள மண்டபம் இரகுநாத பூபாலன் என்பவரால்
கட்டப்பட்டது. தியாகராஜ மண்டபம் அச்சுத பூபாலன்
என்பவரால் கட்ட ஆரம்பிக்கப்பட்டு வணங்காமுடி முத்துத்
தொண்டைமானால் முற்றுப்பெறச் செய்யப்பட்டது. இராமநாதபுர
மன்னர் விஜயரகுநாத சேதுபதியும், புதுக்கோட்டை மன்னரும்,
நடன மண்டபத்தையும் பஞ்சாட்சர மண்டபத்தையும்
இணைக்கும் கட்டடத்தை எழுப்பினர். பஞ்சாட்சர
மண்டபத்தை அடுத்துள்ள
|