பக்கம் எண் :

பண்பாட்டுச் சின்னங்களும்279

மாணிக்கவாசகர் கோவிலைத் திருவாவடுதுறை ஆதீனத்தின்
பிரதிநிதியாக ஆவுடையார் கோவில் கட்டளையில் சுப்பிரமணியத்
தம்பிரான் கட்டுவித்தார்.

ஆவுடையார் கோவிலின் சிறப்பு

1. ஆவுடையார் கோவில் ஒரு சிவ வழிபாட்டுத் தலமாக
இருப்பினும் இங்கு நந்தி இல்லை, கொடிக்கம்பம் இல்லை.
ஆத்மநாதர் என்ற இறைவன் கருவறையில் லிங்க வடிவில்
வழிபடப்பட்டாலும் அவர் பீடத்தில் அருவமாகவே
எழுந்தருளியிருக்கிறார். பீடத்தில் ஆவுடையார் மட்டுமே
உள்ளார். லிங்கம் இல்லை. ஆவுடையார்மீது குவளை சாத்தி
அலங்காரம் செய்து வழிபாடு செய்யப்படுகிறது. அம்மனுக்கும்
இங்கு உருவ வழிபாடு இல்லை. இதனால் இக்கோவில் சமயச்
சிறப்புமிக்கதாக உள்ளது.

2. மாணிக்கவாசகருக்கு இங்கு இரு முக்கிய சந்நிதிகள்
உள்ளன. ஒன்றில், அவர் அமைச்சராக இருக்கும் கோலத்திலும்,
மற்றொன்றில், சிவபக்தராக ஞானத் திருக்கோலத்திலும்
வணங்கப்படுகிறார்.

3. சிற்பக்கலைக்கு உறைவிடமாக இக்கோவில் உள்ளது.
கோவிலின் வாயிலருகிலுள்ள பெரிய மண்டபம் அல்லது
ஆயிரக்கால் மண்டபத்தில் ரணவீரபத்திரர், அகோர
வீரபத்திரர், காளி, ஊர்த்துவ தாண்டவமூர்த்தி, பிட்சாடனர்,
முருகன் கோதண்டபாணியாகக் காட்சியளிப்பது, இடபாரூடர்
சங்கர நாராயணர்
ஆகிய உன்னத சிற்பங்கள் உள்ளன.
ஒரே கல்லினாலான இக்கற்றூண் திருவுருவங்கள் ஒவ்வொன்றும்
உன்னத கலைக் கருவூலமாகும். இம்மண்டபத்தில் குதிரை
வீரர்களைக்கொண்ட நான்கு கற்றூண்களும் உன்னத
வேலைப்பாட்டினைக் கொண்டுள்ளன.

பஞ்சாட்சர மண்டபத்தில் காணப்படும் குதிரைச்சுவாமியின்
திருவுருவமும் அழகுமிக்கது. இம்மண்டபத்தின் ‘முன்
சோமாசிமாரர் யாகத்திற்குப் புலையன் புலத்தியர்
வேடத்தில் சென்ற அம்மையப்பர்‘, ‘கிராத வேடமொடு
கிஞ்சுக வாய் அம்மை