யுடன் அர்ச்சுனருக்குப் பாசுபதம் கொடுத்தல்’ ஆகிய
புராண வரலாற்றைக் கல்லிலே சித்திரித்திருக்கும் சிற்ப
உருவங்கள் உள்ளன. மாணிக்கவாசகர் காலத்துப் பாண்டிய
மன்னனின் சிற்ப உருவம். இராமநாதபுர சேதுபதி மன்னர்,
புதுக்கோட்டை மன்னர் ஆகியோரது உருவச் சிலைகளும்
இங்கு உள்ளன.
தியாகராச மண்டபத்தில் 12 ராசிகளுக்கு அருகில் காணப்படும்
கல் சங்கிலி வளையங்கள் உன்னத சிற்ப வேலைப்பாடு ஆகும்.
இம்மண்டபத்திலுள்ள ஒரு தூணில் மாணிக்கவாசகருடைய இரண்டு
வகைத் திருக்கோலங்களைக் காணலாம். இம்மண்டபத்தின் ஒரு
தூணிலுள்ள ரதியின் சடை வேலைப்பாடு யாவரும் பார்த்துப்
போற்றும்படி உள்ளது. இம்மண்டபத்தின் கொடுங்கைகள் மிகச்
சிறப்பானவை.
ஆவுடையார் கோவிலைப் பொறுத்தவரை சிற்பியின்
கைவண்ணம் இங்குள்ள கொடுங்கைகளில் சிறப்பாக
காணப்படுகிறது. கருங்கல்லை மரப்பலகைபோல் தட்டையாக
ஆக்கியிருத்தல், அக்கல்லைப் பல கோணங்களைக் கொண்ட
கம்பி போல வளைத்திருத்தல் ஆகியவை கடினமான மனித
உழைப்பினால், சிற்பியின் கைவண்ணத்தில் உருவானவையாகும்.
கொடுங்கைகள் கோயிற்கலை அம்சமாகப் பல இடங்களில்
காணப்பட்டாலும், ஆவுடையார் கோவில் மண்டபக்
கொடுங்கைகள் உலகப் புகழ் பெற்றவையாகும். இங்குள்ள
‘இரண்டு கம்பி’ கொடுங்கைகள், ‘மூன்று கம்பி’ கொடுங்கைகள்,
‘ஆறு கம்பி’ கொடுங்கைகள் ஆகிய யாவும் தமிழகச் சிற்பிகளின்
உன்னத உளி வேலைப்பாட்டினால் உருவானவையாகும்.
இக் “கொடுங்கைகளை மரத்தினால் அமைத்திருந்தால்கூட
இவ்வளவு அழகாகவும் உறுதியாகவும் அமைவது சந்தேகம்.”
ஆவுடையார் கோவில் கொடுங்கைகள் தமிழ் மக்களின்
சிற்பக்கலைத் திறனுக்குத் தலைசிறந்த எடுத்துக்காட்டுகளாக
விளங்குகின்றன.
|