பக்கம் எண் :

பண்பாட்டுச் சின்னங்களும்281

மனோரா உப்பரிகை

தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டையிலிருந்து
13 கி.மீ. தெற்கே கடலோரத்தில் சரபேந்திர ராஜன் பட்டினத்தில்
மனோரா
என்ற உப்பரிகை (மாடிக் கட்டடம்) உள்ளது. இது
தஞ்சை மராட்டிய மன்னர் இரண்டாம் சரபோஜியால் (1798-1832)
1814இல் கட்டப்பட்டது. ஐரோப்பிய வரலாற்றில் முக்கியத்துவம்
பெற்ற வாடர்லூ போரில் (1814) நெப்போலியனை
ஆங்கிலேயர்கள் வென்றனர். ஆங்கிலேயரின் இந்த வெற்றியின்
அறிகுறியாக, ஆங்கிலேயரின் நண்பராக விளங்கிய சரபோஜி
மன்னர் இந்த நினைவுச் சின்னத்தைக் கட்டினார். இது 43 மீட்டர்
உயரமுள்ள கட்டடம். 9 மாடிகள் உள்ளன. ஒவ்வொரு
மாடியிலிருந்தும் வெளியே நோக்குவதற்குப் பலகணிகள்
உள்ளன. மனோராவைச் சுற்றி மதிற் சுவர்களுடன் கூடிய
அகழி உள்ளது. மன்னர் சரபோஜி தம் குடும்பத்தினருடன்
இம்மனோராவில் வந்து தங்கியிருக்கிறார்.