பக்கம் எண் :

282தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

25. திருப்பத்தூர்

இராமநாதபுர மாவட்டத்தில், சிவகங்கையிலிருந்து 35 கி.மீ.
தொலைவில் திருப்பத்தூர் உள்ளது. இந்நகர் சிவகங்கைச்
சீமையை ஆட்சிபுரிந்த மருது சகோதரர்களின் ஆட்சிப்பகுதியாக
இருந்தது. இங்கு விஜய ரகுநாத சேதுபதி (கி.பி. 1711-1725) ஒரு
கோட்டையைக் கட்டினார். மருது சகோதரர்கள் ஆங்கிலேயரை
எதிர்த்துப் போரிட்டபொழுது. 1801, ஆகஸ்ட் 27இல் இக்கோட்டை
ஆங்கிலேயர்களால் பிடிக்கப்பட்டது. திருப்பத்தூர் கோட்டையின்
எஞ்சியப் பகுதிகளை இவ்வூரில் காணலாம். திருத்தளி நாதர்
ஆலயத்தின் வடபகுதியில் கோட்டையின் பெரும்பகுதி நல்ல
நிலையில் உள்ளது. ஆங்கிலேயர்களால் பிடிக்கப்பட்ட மருது
சகோதரர்கள் இவ்வூரின் மத்தியில் காணப்படும் அனுமார்
கோவில் அருகில்
தூக்கிலிடப்பட்டதாக அறியப்படுகிறது.
இந்த வீர சகோதரர்களின் உடல்கள் சுவீடன் கிறித்தவ
மருத்துவமனைப் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டன
(1801, நவம்பர்).

திருப்பத்தூரின் பண்பாட்டுச் சின்னமாகச் சிறப்புடன்
விளங்குவது திருத்தளிநாதர் ஆலயமாகும். இது ஒரு
தொன்மைமிக்க சிவ வழிபாட்டுத் தலம் ஆகும்.
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரின் பாடல்களைப்
பெற்ற தலமாகும். பாண்டிய மன்னர்களின் பல திருப்பணிகளை
இக்கோவில் கொண்டுள்ளது. முதலாம் குலோத்துங்க சோழனிடம்
தளபதியாகப் பணியாற்றிய நரலோகவீரன் இக்கோவிலில்
திருப்பணி புரிந்துள்ளார். கி.பி. 14ஆம் நூற்றாண்டில்
இஸ்லாமியப்படைகளின் தாக்குதல்களுக்கு உள்ளான
கோவில்களில் இதுவும் ஒன்றாகும். சடையவர்மன்
வீரபாண்டியனுக்கு
உட்பட்டு சூரைக்குடிப் பகுதியை
ஆட்சிபுரிந்த விஜயாலய தேவன் என்பவர் இக்கோவிலில்
பல திருப்பணிகளை மேற்கொண்டார். மருது சகோதரர்களும்
சில திருப்பணிகளை இங்கு ஆற்றியுள்ளனர்.

இக்கோவிலின் இறைவன் திருத்தளிநாதர் எனப்படுகிறார்.
இங்குள்ள அம்மன் சிவகாமியம்மை எனப்படுகிறார். ஆடல்
வல்லான் சந்நிதி, பைரவர் சந்நிதி, நாகேஸ்வரர் சந்நிதி,