ஆகியவை இக்கோவிலிலுள்ள முக்கியப் பகுதிகள் ஆகும்.
பைரவர் சந்நிதிமுன் மருது சகோதரர்களின் கற்றூண் உருவங்கள்
உள்ளன. பைரவர் சந்நிதியும், நாகேஸ்வரர் சந்நிதியும்,
கற்றளிகளாகும். இவை சிற்ப, கட்டடச் சிறப்புமிக்கவை.
திருப்பத்தூரில் உள்ள சிற்சபையில் இறைவன் (சிவன்)
ஆடியருளினார் என்று புராணவாயிலாக அறியப்படுகிறது.
ஆடவல்லான் சந்நிதி முன்னுள்ள மண்டபம் சிற்ப
வேலைப்பாடுமிக்கது. இம்மண்டபத்திலுள்ள 5 கற்றூண்கள்
ஒவ்வொன்றும் ஒரு கலைக் கருவூலம் ஆகும். இம்மண்டபத்தின்
கொடுங்கைகள் வேலைப்பாடுமிக்கவை. அம்மன் கோவில்,
நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் அழகிய கருங்கல்
திருப்பணியைக் கொண்டுள்ளது.
இக்கோவிலின் சுவர்களில் ஏராளமான கல்வெட்டுகள்
உள்ளன. திருப்பத்தூர் கோட்டையின் ஒரு பகுதி திருத்தளி
நாதர் கோவிலின் வடமதில் சுவராக உள்ளது.
குன்றக்குடி ஆதீனத்தின் நிர்வாகத்திலுள்ள ஐந்து
கோவில்களில் திருத்தளிநாதர் கோவில் முக்கியமான
ஒன்றாகும்.
திருப்பத்தூர் நகரின் சிறப்புக்கு மற்றொரு காரணம்,
இங்குள்ள சுவீடன் கிறித்தவ மருத்துவமனை ஆகும்.
இது கி.பி. 1909 ஆம் ஆண்டு டாக்டர் பிரடரிக் குகெல்பர்க்
என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது. இம்மருத்துவமனையின்
சுற்றுச் சுவர்ப்பகுதியில் மருது சகோதரர்களின் உடல்கள்
அடக்கம் செய்யப்பட்ட இடம் உள்ளது. (ஆனால், நினைவு
மண்டபம் எதுவும் எழுப்பப்படவில்லை).
ஆறுமுகம் பிள்ளை என்ற பெரியார் தனது கல்விப்பணி
மற்றும் இதர சமூக சேவைகள்மூலம் திருப்பத்தூரின் வரலாற்றில்
ஒரு சிறந்த இடத்தைப் பெற்றுள்ளார்.
பிள்ளையார்பட்டி
பிள்ளையார்பட்டி என்ற கிராமம், திருப்பத்தூர்-குன்றக்குடிச்
சாலையில் திருப்பத்தூரிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது.
இக்கிராமத்தின் புகழுக்குக் காரணம் இங்குள்ள
குடைவரைக்
கோவில் ஆகும். இங்குள்ள சிறிய மலையின் அடிவாரத்தில்
|