பக்கம் எண் :

பண்பாட்டுச் சின்னங்களும்285

மலையின் அடிவாரத்தில், முருகன் கோவில் நுழை
வாயிலிலிருந்து சிறிது தொலைவில், மூன்று குகைக் கோவில்கள்
உள்ளன. இக்குகைக் கோவில்கள் மயூரகிரியின் அடிப்பகுதியைக்
குடைந்து அமைக்கப்பட்டதாகும். இவை சிவனுக்காக
எழுப்பப்பட்ட கோவில்களாகும். இவை கி.பி. 8ஆம்
நூற்றாண்டிற்குரிய பாண்டியர் காலக் குகைக் கோவில்களாகக்
கருதப்படுகின்றன. இக்குகைக் கோவில்கள் மூன்றும்
அடுத்தடுத்து வரிசையாக உள்ளன.

முதற் குகைக் கோவிலின் சுவர்களில் விஷ்ணு,
சண்டிகேஸ்வரர், லிங்கோத்பவர், ஹரிகரர், துர்கை,
நடராசர், சுப்ரமணியர், கணேசர்
ஆகிய தெய்வங்களின்
திருவுருவங்கள் துவாரபாலகர்களின் உருவங்கள் ஆகியவை
வடிக்கப்பட்டுள்ளன. இச்சிற்பங்கள்மீது பிற்காலத்தில் சாந்து
பூசப்பட்டதால் இவற்றின் இயற்கை அழகைக் காண
முடியவில்லை. இரண்டாவது குகையில் உள்ள விஷ்ணுவின்
திருவுருவமும் சிறந்த கலைப்படைப்பு ஆகும். மூன்றாவது
குகையில் சிற்ப உருவங்கள் இல்லை. முதல் குகைக்கும்
இரண்டாவது குகைக்கும் இடையிலுள்ள பாறைச் சுவரில்
கணேசரின் திருவுருவம் உள்ளது.

குகைக் கோவிலின் ஒரு தூணில் வட்டெழுத்தில் மயிலீசுரம்
என்று பொருள்படும் கல்வெட்டு உள்ளது. குன்றக்குடி குகைக்
கோவில்கள் பாண்டியர் காலச் சிற்பக் கலைத்திறனுக்குச் சிறந்த
எடுத்துக்காட்டுகளாகும். இவை மத்திய அரசின் தொல்பொருள்
துறையினர் கண்காணிப்பில் உள்ளன.

குன்றக்குடியில் குன்றக்குடி ஆதீனம் உள்ளது. சைவ
சமயத்திற்கு நல்ல பல தொண்டுகளை ஆற்றி வரும் ஆதீனங்களில்
ஒன்று, குன்றக்குடி ஆதீனமாகும். இவ்வாதீனம் சமார் 600
ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீலஸ்ரீ தெய்வசிகாமணி பரமாச்சாரிய
சுவாமிகள் என்பவரால் திருவண்ணாமலையில் தோற்றுவிக்கப்பட்டது.
பின் பிரான்மலைக்கும், அதன்பின் குன்றக்குடிக்கும்
மாற்றப்பட்டது. குன்றக்குடி ஆதீனத்தின் 45ஆவது குரு மகா
சந்நிதானமாக இருப்பவர் ஸ்ரீலஸ்ரீ தெய்வசிகாமணி அருணாசல
தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்
ஆவார். இவர் குன்றக்குடி
அடிகளார்
என்று அழைக்கப்படுகிறார். குன்றக்குடி
அடிகளின் சொற்பெருக்கத்தை யாவரும் அறிவர். இவர்
தமிழ்நாட்டின்