மேலவை உறுப்பினராகவும் சில ஆண்டுகள் பணியாற்றினார்.
குன்றக்குடி, திருப்பத்தூர், சதுர்வேதிமங்கலம் பிரான்மலை,
திருக்கோளக்குடி ஆகிய ஐந்து இடங்களிலுள்ள கோவில்கள்
குன்றக்குடி ஆதீனத்தின் நிர்வாகத்தின்கீழ் உள்ளன.
தற்போதைய மகா சந்நிதானம் தவத்திரு பொன்னம்பல
அடிகளார் ஆவார்.
நேமம் கோவில்
நேமம் என்ற கிராமம் குன்றக்குடியிலிருந்து 3 கி.மீ.
தொலைவில் உள்ளது. இங்கு ஜெயங்கொண்ட சோழீஸ்வரர் என்ற
சிவன் கோவில் உள்ளது. இங்குள்ள அம்மன் சௌந்திர நாயகி
ஆவார். நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் சீரிய திருப்பணிகளை
இக்கோவில் கொண்டுள்ளது. இக்கோவிலின் சிறந்த குடமுழுக்கு
விழா 1907ஆம் ஆண்டு நடைபெற்றுள்ளது. இக்கோவில்
கொடிக்கம்பத்தின் இரு பக்கங்களிலும் யாவரும்
வியக்கும்படியான சிற்பங்கள் உள்ளன. இவை ஒரே
கல்லினாலானவை; நுட்பமான சிற்ப வேலைப்பாட்டினைக்
கொண்டுள்ளன. நடராசர், இடபாரூடமூர்த்தி, காளிதாண்டவம்,
பார்வதி கல்யாணம், காலசம்ஹாரமூர்த்தி, சண்முகநாதர்,
கணேசர், தெட்சிணாமூர்த்தி, பைரவர் ஆகிய தெய்வங்களின்
திருவுருவங்கள் இங்குள்ள கற்றூண்களில் வடிக்கப்பட்டுள்ளன.
இச்சிற்பங்கள் புராணக் கருத்துகளை அழகாகச் சித்திரித்துக்
காட்டுகின்றன. நேமம் கோவில் சிற்பங்கள் நமது அரிய
கலைச்செல்வங்களாகும்.
கோவிலூர்
குன்றக்குடியிலிருந்து காரைக்குடி செல்லும் சாலையில்
8 கி.மீ. தொலைவில் கோவிலூர் என்ற இடம் உள்ளது.
(காரைக்குடியிலிருந்து 3 கி.மீ. தூரம்) இங்கு கொற்றவாளீஸ்வரர்
என்ற சிவாலயம் உள்ளது. அம்மன் நெல்லை நாயகி ஆவார்.
சிவகங்கை தேவஸ்தானத்தின் நிர்வாகத்தில் இக்கோவில் உள்ளது.
இதுவும் ஒரு பழமையான கோவிலாகும். இங்கு நகரத்தாரின்
திருப்பணிகள் உள்ளன. வீரகேசர பாண்டியன், சண்முகநாதர்,
ஊர்த்துவதாண்டவம், ரிஷபாரூடர், கங்காள நாதர், வீரபத்ரர்,
மார்க்கண்டேயர், தில்லைக்காளி, மீனாட்சி கல்யாணம், மீனாட்சி
|