திக்விஜயம் ஆகிய அழகிய சிற்பங்கள் இக்கோவிலில்
உள்ளன. கோவிலூர்ச் சிற்பங்களும் நேமம் கோவில்
சிற்பங்களும் அமைப்பில் ஒப்பிடும்படியாக உள்ளன.
இச்சிற்பங்கள் யாவும் அற்புதமான கலைப்படைப்புகள் ஆகும்.
முத்துராமலிங்க ஞானதேசிகர் என்ற வைசத் துறவியால்
கொற்றவாளீஸ்வரர் கோவிலுக்கு அருகில் (கோவிலூர்) மடம்
தோற்றுவிக்கப்பட்டது. இவர் கொற்றவாளீஸ்வரர் கோவிலில்
சில திருப்பணிகளை மேற்கொண்டார். இத்திருப்பணி வீரப்ப
ஞானதேசிகரால் முடிக்கப்பட்டது.
பிரான்மலை
திருப்பத்தூரிலிருந்து 26 கி.மீ. தொலைவில்
பிரான்மலை
உள்ளது. இப்பகுதி சங்க காலத்தில் பறம்புமலை எனப்பட்டது.
சங்க கால வள்ளல் பாரி ஆட்சி புரிந்த பகுதி எனப்படுகிறது.
இது ‘திருக்கொடுங்குன்றம்’ என்றும் அழைக்கப்படுகிறது.
திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர் ஆகியோரின் பாடல்
பெற்ற தலமாகும். இப்பகுதி சிவகங்கையின் மருது
சகோதரர்கள் ஆட்சிக்குட்பட்டிருந்தது. இம்மலையில்
இச்சகோதரர்கள் பலமிக்க கோட்டையைக் கட்டினர்.
ஆனால், ஆங்கிலேயர்கள் மருது சகோதரர்களை வென்று,
பிரான்மலைக் கோட்டையைக் கைப்பற்றினர் (1801, செப்டம்பர் 18)
கோட்டையின் எஞ்சியப் பகுதிகளை இன்று இங்குக்
காணலாம்.
பிரான்மலையின் சிறப்புக்குக்
காரணம் இங்குள்ள மலைக்
கோவில்கள் ஆகும். மலையின் அடிவாரத்தில் திருக்கொடுங்குன்ற
நாதர் என்ற சிவனும், குயிலமுத நாயகி
என்ற அம்மனும்
காட்சியளிக்கின்றனர். இக்கோவிலின் வடகிழக்குப்
பிரகாரத்தின்
கூரைப் பகுதியில் தொங்கும் கல்வளையங்கள்
சிற்பக் கலைச்
சிறப்புமிக்கவை. திருக்கொடுங்குன்ற நாதர் கோவிலுக்குச் சற்று
உயரே மலையின் நடுப்பகுதியில் பைரவர் கோவில் உள்ளது.
பைரவர் கோவிலுக்கும் உயரே குடைவரைக் கோவில் உள்ளது.
கி.பி. 8ஆம் நுாற்றாண்டிற்குரிய, பாண்டியர் காலக் குடைவரைக்
கோவிலாக இது கருதப்படுகிறது. இது சிவனுக்காக
எழுப்பப்பட்டதாகும். இங்குக் காட்சியளிக்கும் இறைவன்
|