பக்கம் எண் :

294தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

“சிவபெருமானுக்குச் சேவை செய்ய விரும்புகிறவர்கள்
அவனுடைய படைப்புகளாகிய உலகிலுள்ள எல்லா உயிர்களுக்கும்
சேவை செய்ய முற்பட வேண்டும்.”

ஆகியவை விவேகானந்தர் ஆற்றிய உரையின் சில
கருத்துகள் ஆகும்.

இராமேஸ்வரத்திலுள்ள இராமநாதசுவாமி கோவில் நமது
பண்பாட்டின் பெருமையைக் கூறும் ஓர் உயரிய சின்னம் ஆகும்.

தனுஷ்கோடி

இராமேஸ்வரத்திலிருந்து 25 கி.மீ. தொலைவில், இராமேஸ்வரம்
தீவின் தென்கிழக்கில் தனுஷ்கோடி உள்ளது. தனுஷ்கோடியிலிருந்து
ஸ்ரீலங்கா நாட்டிலுள்ள தலைமன்னார் 37 கி.மீ. தொலைவில்
மட்டும் உள்ளதால் ஸ்ரீலங்காவுடன் கடல்வாணிபம் புரியத்
துனுஷ்கோடி சிறந்த துறைமுகமாக விளங்கியது. மேலும்,
இராமேஸ்வரத்தில் வழிபாடும், தனுஷ்கோடியில் நீராடலும்
செய்தால் புனித யாத்திரை முற்றுப் பெறுகிறது என்று
கருதப்படுவதால், இராமேஸ்வரம் செல்லும் பக்தர்கள்
தனுஷ்கோடிக்கும் சென்று வந்தனர். ஆனால், 1964ஆம்
ஆண்டில் வீசிய பயங்கரச் சூறாவளி, தனுஷ்கோடியை
அழித்துவிட்டது. புதிய தனுஷ்கோடி உருவாக்கப்படுகிறது.

ஸ்ரீராமர் எழுந்தருளியுள்ள கோதண்டராமர் கோவில்
இராமேசுவரத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது.
இராமேஸ்வரம் கோவிலுக்கு வடக்கில் 5 கி.மீ. தொலைவில்
கந்த மாதன பர்வதம்
என்ற இடம் உள்ளது. இராமர் கடலைக்
கடந்து இலங்கை செல்லுமுன், இங்குள்ள குன்றில் தங்கினார் என்று
கூறுவர். இக்குன்றின்மேல் அமைந்துள்ள மண்டபத்தில்
ஸ்ரீராமரின் பாதங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.