பக்கம் எண் :

300தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

இக்கோவிலில் ஆதி ஜெகநாதப் பெருமாள்,
பத்மாசனித் தாயார், தர்ப்பசயன ராமர், பட்டாபிசேக
ராமர், சேதுக்கரை ஆஞ்சநேயர்
ஆகிய சந்நிதிகள்
உள்ளன.

விஜயநகர அரசைச் சேர்ந்த குமார கம்பணர்
என்பவர் இக்கோயிலுக்கு அதிக தானங்கள் வழங்கியுள்ளார்.
இதற்கான கல்வெட்டுகள் இக்கோவிலில் உள்ளன.
கி.பி 1778இல் அனந்தாழ்வன் என்பவர் இக்கோயிலில் சில
மண்டபங்களைக் கட்டியுள்ளார். மருது சகோதரர்களும்
இக்கோவிலில் திருப்பணியாற்றியுள்ளனர்.

உத்திரகோச மங்கை

இராமநாதபுர நகரிலிருந்து 13 கி.மீ. தொலைவில் உத்திர
கோசமங்கை என்ற கிராமம் உள்ளது. இங்கு மங்களேஸ்வர
சுவாமி கோவில் உள்ளது. இது இராமநாதபுர தேவஸ்தானத்தின்
நிர்வாகத்தில் உள்ளது. ‘ஆதி சிதம்பரம்’ என்ற பெயர்
இக்கோவிலுக்கு உள்ளது. இக்கோயிலின் வளர்ச்சிக்கு
மாறவர்மன் வீரபாண்டியன், தஞ்சாவூர் நாயக்க மன்னரான
அச்சுதப்பர், மதுரை நாயக்க முத்துவீரப்பர், சேதுபதி
மன்னர்கள்
ஆகியோர் ஏராளமான மானியங்களை
வழங்கியுள்ளனர். இக்கோவிலைச் சேர்ந்த நடராசர் சந்நிதிக்கு
எதிரிலுள்ள மண்டபத்தில் 18ஆம் நூற்றாண்டிற்குரிய அழகிய
ஓவியங்கள் உள்ளன. இக்கோவிலிலுள்ள எழுநிலைக் கோபுரம்
அழிந்த நிலையில் காணப்படுகிறது. தேவகோட்டை நகரத்தாரால்
இக்கோவிலுக்குச் சீரிய முறையில் கருங்கல் திருப்பணி வேலை
நடைபெற்றுள்ளது.

தேவிபட்டினம்

இராமநாதபுரத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் தேவி
பட்டினம் உள்ளது. இந்துக்களின் புனித யாத்திரைத் தலம்
ஆகும். இங்கு ஸ்ரீராமனால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகக்
கூறப்படும் நவ பாஷாணம் (9 கற்கள்) என்ற நவக் கிரகங்கள்
உள்ளன. இவை கரையிலிருந்து சுமார் 40 மீட்டர்
தொலைவில்