பக்கம் எண் :

பண்பாட்டுச் சின்னங்களும்301

கடலுக்குள் அமைந்துள்ளன. இந்தியாவிலேயே இங்குதான்
கடலில் நவக்கிரகங்கள் உள்ளன.

இங்கு கடலுக்கு அருகில் கடலடைத்த பெருமாள் கோவில்
உள்ளது. இக்கோவில், கி.பி. 1533இல் ‘சுந்தரத் தோழுடையான்
மாவெலி வாணாதிராயனின், தானங்களைப் பெற்றது.’

தேவிபட்டினம் ஒரு சிறு துறைமுகமாக விளங்கியது;
1954ஆம் வருடம் இத்துறைமுகம் செயல்படுவது நின்றது.

கீழக்கரை

இராமநாதபுரத்திலிருந்து 16 கி.மீ. தொலைவில் கீழக்கரை
உள்ளது. இங்குச் சீதக்காதி மரக்காயர் (சையத் காதர்) என்ற
வள்ளலின் கல்லறை உள்ளது. சீதக்காதி, கிழவன்
சேதுபதி
யின் அன்பையும் ஆதரவையும் பெற்றிருந்தார்.
‘சீறாப்புராணம்’ பாட உமறுப்புலவருக்கு இவர்
கொடையளித்தார். படிக்காசுப் புலவர் சீதக்காதியைப் புகழ்ந்து
பாடியுள்ளார். ‘செத்தும் கொடை கொடுத்தார்’ என்று
இவர் சிறப்பிக்கப்படுகிறார். இவரது கல்லறை இந்துக்
கலைத்தன்மையைக் கொண்டுள்ளது. இக்கல்லறை ஜு ம்மா
மசூதியினுள் இருக்கிறது.

முத்து வாணிகத்திற்குப் பெயர் பெற்று விளங்கிய
கீழக்கரையில் சேதுபதிகளின் அனுமதி பெற்று
டச்சுக்காரர்கள் வாணிபத்தலம் அமைத்திருந்தனர் (1759),
சேதுபதியின் அமைச்சர் தாமோதரம் பிள்ளையிடமிருந்து
டச்சுக்காரர்கள் கி.பி.1767இல் பல சலுகைகளைப் பெற்றனர்.
டச்சுக்காரர்கள் கட்டிய கட்டடங்களின் எஞ்சிய சில பகுதிகளை
இங்குக் காணலாம்.

கீழக்கரையில் ‘நினைத்தது முடித்த விநாயகர்
கோவில்’
உள்ளது. விஜயநகர அரசர் அச்சுதராயர்,
திருமலை சேதுபதி
ஆகியோரின் கொடைகளை இக்கோவில்
பெற்றுள்ளது. இங்குள்ள மற்றொரு சிவாலயம் சொக்கநாத சுவாமிக்குரியதா
கும். இது வரகுண பாண்டியனால்
கட்டப்பட்டதாகும்.