பக்கம் எண் :

326தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

குற்றாலத்திலிருந்து 40 கி.மீ. தொலைவில் பாபநாசம்
உள்ளது. இங்கு ஒரு புகழ்மிக்க சிவாலயம் உள்ளது. பொதிகை
மலை அருகில் உள்ளது. இங்குள்ள அருவியில் நீராடி
இறைவனை வழிபட்டால் பாவங்கள் களையப்படுவதாகக்
கூறுவர். அருவி அருகில் அகத்திய முனியவருக்கான
ஆலயம் உள்ளது. கைலாயத்தில் நடந்த இறைவன் இறைவியின்
திருமணக் காட்சியை இறைவன் அகத்திய முனிவருக்காகப்
பொதிகை மலை வந்து காட்டியதாகப் புராணவாயிலாக
அறியப்படுகிறது. இவ்வாலயத்தின் இறைவன் பாபவினசீஸ்வரர்
எனப்படுகிறார்.

பாபநாசம் அருகில் முண்டந்துறை வனவிலங்கு
சரணாலயம் உள்ளது. இச்சரணாலயத்தில் புலிகள்
பாதுகாக்கப்படுகின்றன.

கடையநல்லூருக்கு அருகில் திருமலைப்புரம் உள்ளது.
இங்குள்ள மலையில் ஒரு குகைக் கோவில் உள்ளது. இது
சிவனுக்காக வடிக்கப்பட்டதாகும். இக்கோவிலில் பாண்டியர்
காலத்து வண்ண ஓவியங்கள் உள்ளன. இந்த ஓவியங்களை
முதலில் கண்டுபிடித்தவர் அறிஞர் தூப்ராய் ஆவார்.
திருமலைப்புரக் குகைக் கோவில் ஓவியங்கள் பாண்டியர்
காலத்து ஒவியக்கலைத் திறனுக்கு எடுத்துக்காட்டாக
விளங்குகின்றன.