பக்கம் எண் :

பண்பாட்டுச் சின்னங்களும்35

சேப்பாக்கம் அரண்மனை

சென்னைப் பல்கலைக் கழகத்திற்குத் தெற்கில் சேப்பாக்கம்
அரண்மனைக் கட்டடம் உள்ளது. கர்நாடக நவாப் முகமதலி
ஆங்கிலேயருடன் நட்புக்கொண்டிருந்தார். இவர் ஆர்க்காட்டை
விட்டுவிட்டுச் சென்னையைத் தமது தலைமையிடமாகக் கொண்டார்.
இவருக்குக் கி.பி. 1768ஆம் ஆண்டு சென்னை சேப்பாக்கத்தில்
ஒரு அழகிய மாளிகை கட்டப்பட்டது. நவாப் முகமதலி 1765இல்
காலமானார். கி.பி. 1801இல் ஆங்கில கவர்னர்-ஜெனரல்
வெல்லெஸ்லி
பிரபுவால் கர்நாடகம் முழுவதும் ஆங்கிலேயர்
ஆட்சிக்குட்பட்ட பகுதியாயிற்று. கர்நாடக நவாப் ‘நாடு இல்லாத
நவாப்
’ ஆனார். கி.பி. 1855இல் கவர்னர் ஜெனரல் டல்ஹௌசி
பிரபு
வால் கர்நாடக நவாப் பதவியும் நீக்கப்பட்டது. இதன்பின்
நவாப் மாளிகையில் அரசு அலுவலகங்கள் செயல்படத்
தொடங்கின. தமிழ்நாடு அரசின் அலுவலகங்கள் செயல்படும்
சேப்பாக்கம் அரண்மனை ஒரு தொல்பொருள் சின்னமாகும்.
இதை நாம் நன்கு காத்திட வேண்டும்.

உலகத் தமிழ் மாநாட்டுச் சிற்பங்கள்

1968ஆம் ஆண்டு சென்னை நகரில் இரண்டாவது உலகத்
தமிழ் மாநாடு நடைபெற்றது. இவ்விழாவைச் சிறப்பிக்கும் வகையில்
அப்பொழுது தமிழ்நாட்டில் அறிஞர் அண்ணா தலைமையில்
பதவியிலிருந்த தி.மு.க. அரசின் முயற்சியால் தமிழிலக்கிய
மேதைகள் பலருக்கு மெரினாக் கடற்கரையில் உருவச் சிலைகள்
நிறுவப்பட்டன. கம்பர், இளங்கோவடிகள், கண்ணகி, ஜி.யு. போப்,
டாக்டர் கால்டுவெல், வீரமாமுனிவர், பாரதியார்
ஆகியோரின்
அழகிய உருவச் சிலைகளை நீண்ட கடற்கரையில் காணலாம்.
கடற்கரையிலுள்ள உழைப்பாளிகளின் உருவச்சிலை, கண்ணைக்
கவரும் கருத்துமிக்க சிலை ஆகும்.

அண்ணா சதுக்கம் தமிழ்

நாட்டின் முதலமைச்சராகப் பணியாற்றிய C.N.
அண்ணாதுரை
யின் நினைவாக அண்ணா சதுக்கம்
எழுப்பப்பட்டுள்ளது. இது சென்னை ‘மெரினா’க் கடற்கரையருகில்