பக்கம் எண் :

376தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

சிவனின் சந்நிதி முன்னுள்ள தூண்கள் இரண்டின்
அடிப்பகுதியில் சமண சமயத் தீர்த்தங்கரர்களான
பார்சுவநாதரின்
உருவமும், மகாவீரரின் உருவமும் உள்ளன.
தூணின் கீழ்ப்பகுதியில் சமண சிற்பமும் அதன் மேல்பகுதியில்
சிவலிங்கமும் உள்ளன. இதுபோல் தமிழகத்தில் வேறு
எங்கும் இல்லை.

கோவிலின் நுழைவாயிலருகில் கல்லினாலான இரு
பெரிய நாகங்களின் சிற்ப உருவங்கள் காட்சி தருகின்றன.

நாகராசர் ஆலயத்திலிருந்து சிறிது தொலைவில் உள்ள
வடசேரியில் சோழராஜா கோவில் என்ற சிவன் கோவில்
உள்ளது. இக்கோவிலும் இதையடுத்த பகுதியும் வேணாட்டு
மன்னன் ஒருவரால் சோழப் பேரரசனுக்குச் சமாதானத்தின்
சின்னமாக அளிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.

சோழராஜா கோவிலிலிருந்து சிறிது தொலைவில்,
கிருஷ்ணன் கோவில்
உள்ளது. கி.பி. 13ஆம் நூற்றாண்டில்
திருவாங்கூர்ப் பகுதியை ஆட்சிபுரிந்த சர்வாங்கநாதன் என்ற
ஆதித்தவர்மன் இக்கோவிலைக் கட்டினார் எனப்படுகிறது.
இம்மன்னர் தங்கிய இரு கட்டடப்பகுதிகள், இக்கோவிலுக்கு
அருகில் உள்ளன.

இந்நகரிலுள்ள புனித சவேரியார் பேராலயம்
கத்தோலிக்கக் கிறித்தவர்களின் முக்கிய வழிபாட்டுத் தலம் ஆகும்.
கி.பி. 1544இல். தூய பிரான்சிஸ் சவேரியார் வழிபாடு செய்த
இடத்தில் எழுப்பப்பட்ட மாதா கோவில் இங்கு உள்ளது.
கி.பி. 1819இல் லண்டன் நன்னெறிக் குழுவால் எழுப்பப்பட்ட
கற்கோவில், கி.பி. 1843இல் தோற்றுவிக்கப்பட்டுப் பின்
புதுப்பித்து அமைக்கப்பட்ட கஸ்பா சபை ஆகியவை இந்நகரிலுள்ள
இதர முக்கிய கிறித்தவ ஆலயங்களாகும்.

நாகர்கோவிலிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள
திருப்பதி சாரத்தில் திருவாழ்மார்பனுக்
குரிய வைணவ
ஆலயம் உள்ளது. பூதப்பாண்டியில் ‘பூதலிங்க சுவாமி’ என்ற
சிவன் வோவில் உள்ளது. நாகர்கோவிலை அடுத்துள்ள
வெள்ளிமலை, வேளிமலை, மருங்கூர்
ஆகிய இடங்களில்
முருகனது கோவில்கள் உள்ளன.