பக்கம் எண் :

பண்பாட்டுச் சின்னங்களும்377

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில்

நாகர்கோவிலிலிருந்து 23 கி.மீ. தொலைவில் திருவட்டாறு
உள்ளது. இங்கு ஆதிகேசவப் பெருமாள் கோவில் உள்ளது.
இது ஒரு புகழ்மிக்க வைணவ வழிபாட்டுத்தலம் ஆகும். கோவிலைச்
சுற்றி ஆறு வட்டமாகச் செல்வதால் ‘திருவட்டாறு’ என்ற பெயர்
வழங்கலாயிற்று என்பர். நம்மாழ்வாரால் பாடல்பெற்ற தலம்.

வேணாட்டு இளவரசன் வீர உதய மார்த்தாண்டவர்மா
(கி.பி. 12ஆம் நூற்றாண்டு) இக்கோவிலுக்குப் பல திருப்பணிகள்
செய்தார். மன்னர் வீரரவி ரவிவர்மன் என்ற குலசேகரப்
பெருமாள் மூலவரின் முன்னுள்ள ஒற்றைக்கல் மண்டபத்தைக்
கட்டினார் (கி.பி. 1604).

மூலவரான ஆதிகேசவப் பெருமாள் அனந்த சயனத்தில்
அழகுடன் காட்சி தருகிறார், மூலவரைக் காணுதல் கண்கொள்ளாக்
காட்சியாக உள்ளது.

கி.பி. 1741இல் வேணாட்டு மன்னர் மார்த்தாண்டவர்மாவுக்கும்,
டச்சுப் படைகளுக்கும் குளச்சல்
என்ற இடத்தில்
(நாகர்கோவிலிலிருந்து 23 கி.மீ.) ஒரு போர் நடந்தது.ed;
இப்போருக்குப் புறப்படுமுன் மன்னர் மார்த்தாண்டவர்மா,
தமது குலதெய்வமான திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாளை;
வழிபட்டுச் சென்றார் என்று தெரியவருகிறது.

கலைச்சிறப்பு

1. கருவறையிலுள்ள பெருமாள் சுமார் 6 மீட்டர் நீளமுள்ள
அற்புதமான உருவ அமைப்பைக் கொண்டுள்ளார்.

2. கருவறை முன்னுள்ள ‘ஒற்றைக் கல்’ மண்டபம் 22
மீட்டர் சுற்றளவையும், சுமார் 1 மீட்டர் உயரத்தையும் கொண்ட
ஒற்றைக் கல்லின்மேல் எழுப்பப்பட்டதாகும். இந்த ஒற்றைக் கல்
அக்காலக் கலைஞர்களின் பொறியியல் திறனுக்கு ஒரு சிறந்த
எடுத்துக்காட்டாகும்.