| இவ் வைந்தாம் பத்தைப் பரணர் பாடவில்லை யெனவும் இதன் பாட்டுடைத் தலைவனான கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவனும் கண்ணகிக்குச் சிலை எடுப்பித்த சேரன் செங்குட்டுவனும் ஒருவரல்லர் ; இரு வேறு வேந்தர்கள் என்றும் சிலர் கூறுவர்.52 இதற்குப் போதிய சான்றுகள் அளிக்கப்படவில்லை. இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் என்பதையும் அவர் சேரன் செங்குட்டுவனின் இளவல் என்பதையும் அந் நூற் பதிகமே தெரிவிக்கின்றது. இக்காப்பியத்தின் வரந்தரு காதையில் இளங்கோவடிகள் ‘வேள்விச் சாலையில் வேந்தன் போந்தபின் யானுஞ் சென்றேன்’53 என்று கூறுகின்றார். எனவே, இம் மாபெருங் காப்பியத்தின் ஆசிரியர் இன்னார் எனத் தேடி இடர்ப்படவேண்டியதில்லை. ஆகவே, சிலப்பதிகாரக் கதை வரலாற்றுச் சான்றுடையது என்பதில் ஐயமேதுமின்று. சேர நாட்டில் பகவதி என்னும் பெயரில் கண்ணகி வழிபாடு நடைபெற்று வருகின்றது. ‘ஒற்றை முலைச்சி’ யம்மனுக்காக்கிய கோயிலும் அங்கு ஒன்று உண்டு. கயவாகு என்ற சிங்கள மன்னன் இலங்கையில் பத்தினி வழிபாட்டைத் தொடங்கிவைத்தான். இலங்கை மக்களும் ஆடி மாதந்தோறும் பத்தினி விழா எடுத்து வந்தனர். இன்றும் இவ்விழா நடைபெற்று வருகின்றது. அவ்விழாவில் பத்தினிக் கல் ஒன்றைத் திருவீதிஉலா எடுப்பித்தல் வழக்கமாகவும்உ ள்ளது. அவ்விழாவுக்கு அந் நாட்டில் ‘பெரிஹரா’ என்று பெயர் வழங்குகின்றது. பெரிஹரா என்றால் ‘பிராகாரம்’ (சுற்றி வருதல்) என்று பொருள்.54 இலங்கையின் வடக்கிலும், கிழக்கிலும் பல இடங்களில் கண்ணகி கோயில்கள் எழுப்பப்பட்டிருந்தன. இன்றும் சில இடங்களில் கண்ணகி வழிபாடு தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. சென்ற நூற்றாண்டில் யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் சமணப் பெண் தெய்வமான கண்ணகியைத் தமிழர் வணங்கலாகாதெனத் தடுத்துப் பல கண்ணகி கோயில்களை இராசராசேசுவரி கோயில்களாக மாற்றி அமைப்பித்தார் எனக் கூறுவர். சிலப்பதிகாரத்தில் உலக இயல்புக்குப் புறம்பான தெய்விக நிகழ்ச்சிகள் பல சேர்ந்துள்ளன. கடவுளர் வானத்தில் பறப்பது, மக்கள் உருமாறுவது, கற்புடைய பெண்ணைத் தீயும் தீண்ட 52. பதிற்றுப் பத்துச் சொற்பொழிவுகள் (கழகம்) ஐந்தாம் பத்து. அ.ச. ஞானசம்பந்தன் 53. சிலப். 30. 170. 171. 54. கே. கே. பிள்ளை - தென்னிந்தியாவும் இலங்கையும் பக். 176 |