| வகுக்கும் மரபு இலக்கியத்தில் காணப்படவில்லை யாகையால் கண்ணகி வேறு, திருமாவுண்ணி வேறு என்று கொள்ளவேண்டும். ஒரு முலையைத் திருகி எறிந்த பெண்களின் கதைகள் பௌத்த சாசனங்களிலும் இடம் பெற்றுள்ளன. சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இரு காப்பியங்களும் கி.பி. 8ஆம் நூற்றாண்டிலோ, அதற்குப் பிந்தியோ கற்பனை செய்யப்பட்ட இலக்கியப்புரட்டுகள் என்றும், இக் காப்பியங்கள் கூறும் வரலாறுகள் நிகழ்ந்த காலத்திலேயே தாமும் வாழ்ந்திருந்ததாகக் கூறும் பெயரில்லாப் பொய்யர் எவரோ இவற்றைப் புனைந்து விட்டனர் என்றும் கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி கருதுகின்றார்.56 தமிழ்நாட்டில், கோவலன் கதை பாமர மக்களிடையே வேறு விதமாகவும் வழங்கி வருகின்றதாகையால் சிலப்பதிகாரக் கதையை நம்பத்தகாத வெறும் புரட்டு என்பார் எஸ். வையாபுரிப் பிள்ளை அவர்களும், இவர்களுடைய கருத்துகளை ஆழ்ந்து ஆய்பவர்கட்கு அவற்றின் பயனின்மை நன்கு புலப்படும். கண்ணகி வரலாற்றுடன் தொடர்புகொண்ட பெரிஹராவிழா இலங்கையில் பல காலமாக நடைபெற்று வருவதும், கண்ணகி வழிபாட்டைக் கயவாகுவுடன் இராசாவளி தொடர்புறுத்துவதும் கண்ணகியினுடைய படிவம் என்று நம்பக்கூடிய வெண்கலச் சிலை ஒன்று இலங்கையில் கண்டெடுக்கப்பட்டதும் சிலப்பதிகாரத்தின் அடிப்படை வரலாற்றுக் கூறுகளை மெய்ப்பிக்கின்றன. வடநாட்டில் வாழ்ந்திருந்த புகழ்பெற்ற பௌத்த நூலாசிரியரான புத்தகோசரும், பாலி மொழியில் பல நூல்களை இயற்றியுள்ள புத்த தத்தரும் உடன்காலத்தவர்கள் ஆவார்கள். இருவரும் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள். ‘அபிதம்மாவதாரம்’ என்னும் பெயருள்ள தம் நூலில் புத்த தத்தர் தம் காலத்தில் வளமலிந்து ஓங்கி நின்ற காவிரிப்பூம்பட்டினத்தைப் பற்றிய செய்திகள் சிலவும் தந்துள்ளார். களப குலத்து மன்னனான அச்சுதவிக்கந்தன் என்பவன் ஆட்சியில்தான் ‘விநய விநிச்சயம்’ என்னும் தம் நூலை எழுதி முடித்ததாக அவர் அந் நூலின் முடிவுரையில் குறித்துள்ளார். தமிழ்நாட்டின் வரலாற்றில் கி.பி. 5ஆம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் களப்பிரரும், அச்சுதவிக்கந்தனும் தலைகாட்டுகின்றனர். காவிரிப் பூம்பட்டினமானது 56. ஹீராஸ் மெமோரியல் செலக்சர்ஸ்-கே.ஏ.நீ.சாஸ்திரி, பக். 55, 56. |