| கொண்டிருந்தனர். பொருளைக் கொண்டுதான் ஏனைய அறங்களைச் செய்ய முடியும் என்று அவர்கள் உறுதியாக எண்ணினர்.43 இரு யானைகள் ஒன்றோடொன்று மோதிக் கொண்டு போரிடுவதை ஒரு குன்றின் மேலேறி அச்சமின்றிக் காணலாம் அன்றோ? அதைப்போலக் கையில் பொருளை வைத்துக் கொண்டு ஒரு தொழிலைப் புரிபவன் எந்த இடையூற்றையும் பொருட்படுத்த வேண்டியதில்லை. இல்லற வாழ்வில் அமர்ந்து வருவிருந்து ஓம்புதல் பண்டைத் தமிழரின் தனிப்பட்ட பண்பாடாகும்.44 அவர்கள் அமிழ்தம் கிடைத்தாலும் அதைப் பகிர்ந்து உண்பர்; மதுவையும் விருந்தினருடன் கூடி உவந்து அருந்துவர்.45 உணவு அரிசிச் சோற்றையே பண்டைய தமிழர் தம் சிறப்பு உணவாகக் கொண்டனர். அவர்கள் புழுங்கலரிசியையே உண்பது வழக்கம்.46 அரிசியை உரலிலிட்டு அதை வெளுக்கத் தீட்டியே உலையிலிடுவார்கள்.47 அவர்கள் வரகையும் சாமையையும் சமைத்து உண்பதுண்டு.48 தமிழகத்தில் பல்வகையான நெல் விளைந்தது. சோற்றோடு காய்கறி வகைகளையும் அட்டு உண்பவர். காய்கறிக்குக் கடுகு தாளிப்பார்கள்.49 மிளகும் புளியும் உப்பும் உணவில் சேரும்.50 மாங்கனியைப் பிழிந்து சாறு எடுத்து, அதைப் புளிக்கவைத்து அதைப் புளியாகப் பயன்படுத்துவது முண்டு. இவையன்றிக் களாப்பழப் புளி, துடரிப்புளி, நாவற்பழப்புளி ஆகியவும் பயன்படுவதுண்டு.51 கொம்மட்டி மாதுளங்காயை அரிந்து, அதனுடன் மிளகின் பொடியைக் கலந்து கறிவேப்பிலை கூட்டிப் பசு வெண்ணெயில் அதைப் பொரிப்பார்கள்.52 வடுமாங்காய் ஊறுகாய் அக் காலத்திலேயே உண்டு.53 பலாப்பழம், இளநீர், வாழைப்பழம், நுங்கு, சேம்பிலைக்கறி, வள்ளிக்கிழங்கு, சுட்ட பனங்கிழங்கு ஆகியவற்றையும் பண்டைத் தமிழர் உண்டனர். சோற்றுக்கான அரிசி முல்லைப்பூப்போல வெண்மையாகவும் மென்மையாகவும் இருக்கும். ஓர் அரிசியிலேனும் இடைவரிகளோ 43. அகம். 33. 44. புறம். 182. 45. புறம். 234, 235 46. சிறுபாண். 193-4 47. அகம். 394; புறம். 399 48. புறம். 143. 49. புறம். 127, 250. 50. குறுந். 167 51. புறம். 239; அகம். 37 52. பெரும்பாண். 305-310 53. பெரும்பாண். 108, 110. |