| இவன் இளையோன் என்று கருதி இவனை இகழ்ந்தனர். கரிகாலன் தானும் ஒரு முதியோன் போல உருமாறி வந்து அவ் வழக்கை நேர்மையுடன் தீர்த்து அவர்களை மகிழ்வித்தான்.242 இவன் கருவூரில் தங்கியிருந்தபோது கழுமலத்திலிருந்து யானை ஒன்று வந்து இவனைத் தன் முதுகின்மேல் ஏற்றிக்கொண்டு வந்து அரியணையின்மேல் அமர்த்திற்றாம். கரிகாலன் தமிழ்ப் புரவலன். தன்மீது பட்டினப்பாலை என்னும் நூலைப் பாடிய கடியலூர் உருத்திரங்கண்ணனாருக்கு இவன் பதினாறு நூறாயிரம் பொன் பரிசளித்தான் என்று கூறப்பட்ள்ளது.243 முடத்தாமக் கண்ணியார் என்ற மற்றொரு புலவர் இவன்மேல் பொருநராற்றுப்படையைப் பாடியுள்ளார். தஞ்சைக்கு இருபத்துநான்கு கிலோமீட்டர் தொலைவிலுள்ள வெண்ணி என்னும் ஊரில் நிகழ்ந்த ஒரு போரில் சோழன் கரிகாலன் சேரன் பெருஞ்சேரலாதனையும், பாண்டியன் ஒருவனையும் பதினொரு வேளிரையும் ஒருங்கே தோல்வியுறச் செய்தான்.244 இவனைப் பற்றிய பாடல்கள் புறநானூற்றில் சேர்க்கப்பட்டுள்ளன. இமயம்வரையில் படையெடுத்துச் சென்று தன்னை எதிர்த்து நின்ற மன்னர் அனைவரையும் வணக்கி இமயத்தில் புலி இலச்சினையைப் பொறித்துத் திரும்பினான். தன் தோள் வல்லமையினால் தமிழகம் முழுவதையும் கரிகாலன் தன் ஆட்சியின்கீழ்க் கொணர்ந்தான். கரிகாலன் இலங்கையின்மேல் படையெடுத்துச் சென்றான். அது இவனுடைய வாழ்க்கையிலேயே ஒரு பெரிய நிகழ்ச்சியாகும். இலங்கையின் வரலாற்றைக் கூறும் மகாவமிசம் என்னும் நூலில் இப் படையெடுப்பைப் பற்றிய செய்திகள் காணப்படவில்லை. எனினும், இலங்கையின் பிற்காலத்திய வரலாறுகள் அதைப் பற்றிக் கூறுகின்றன. இலங்கைப் போரினால் கரிகாலனுக்கு விளைந்த நன்மைகள் பல. அவன் சிங்களவர் பன்னீராயிர வரைச் சிறை செய்து கொண்டுவந்து காவிரிப்பூம்பட்டினத்தில் கோட்டை கட்டுவதற்கு அவர்களைப் பணிகொண்டான். கரிகாலன் தன் குடிமக்களுக்குப் பல நன்மைகள் புரிந்தான். அவற்றுள் மிகவும் சிறப்பானது காவிரியாற்றின்மேல் இவன் கட்டிய அணையேயாகும். மக்களுக்கு உணவை வழங்கிய உழவுத் 242. மணி. 4 : 107-108; பொருநர். 187-8 : பழமொழி, 21, 62, 105. 243. கலிங். 198. 244. பொருநர். 146-8 ; அகம். 55 : 10-11; 246:8-13; புறம். 7, 66, 224. |