பக்கம் எண் :

212தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்

இருந்துவந்தது. இவர்கள் சைவ ஈடுபாடுடையவர்கள். குடிமல்லம்
பரசுராமேசுவரரின் கோயிலுக்கும், திருவல்லம் வில்வநாதேசுவரர்
கோயிலுக்கும் இவர்கள் பல நிவந்தங்கள் அளித்துள்ளனர்.

முத்தரையர்கள் (சு.கி.பி. 650- சு.கி.பி. 860)

     குறுநில மன்னருள் தலைசிறந்து விளங்கியவர்கள் முத்தரையர்கள்.
முத்தரையர்கள், களப்பிர குலத்தைச் சார்ந்தவர்களெனச் சிலர் கருதுகின்றனர்.
ஆனால், அதற்குப் போதிய சான்றுகள் இல்லை. அவர்கள் பல்லவப்
பேரரசுக்கு உட்பட்டுத் தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, பழைய புதுக்கோட்டை
சமஸ்தானம் ஆகிய நிலப்பகுதியை ஆண்டுவந்தனர். திருக்காட்டுப்பள்ளிக்கு
அண்மையில் இப்போது ஒரு சிற்றூராகக் காட்சியளிக்கும் செந்தலை என்பது
முத்தரையர் ஆட்சியில் சந்திரலேகா என்ற அழகிய பெயரில் அவர்களுடைய
தலைநகராகச் செயல்பட்டு வந்தது. பாண்டியரோடும் சோழரோடும்
பல்லவர்கள் போர் புரிந்த போதெல்லாம் முத்தரையர்கள் பல்லவருக்குத்
துணைநின்று வெற்றிகாண உதவியுள்ளனர்.

     முத்தரையருள் முதன்முதல் கல்வெட்டுகளில் நாம் அறிந்து கொள்ளும்
குறுநில மன்னன் பெரும்பிடுகு முத்தரையன் என்பான் ஆவான். செந்தலைக்
கல்வெட்டில்11 இவன் பெயர் காணப்படுகின்றது. இவன் கி.பி. 655-680
ஆண்டுகளில் வாழ்ந்திருந்தவன்; முதலாம் பரமேசுவரவர்மன் காலத்தவன்.
இவனையடுத்து இவன் மகன் இளங்கோவடியரையன் என்கிற மாறன்
பரமேசுவரன் (கி.பி. 680-சு. 705) என்பவனும், அவனையடுத்து அவன் மகன்
இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையன் என்கின்ற சுவரன் மாறன் (சு.கி.பி.705-சு.
745) என்பவனும் அரியணை ஏறினர். சுவரன்மாறன் இரண்டாம் பரமேசுவரன்,
இரண்டாம் நந்திவர்மன் காலத்தவன்; பிந்திய பல்லவ மன்னனுடன் நட்புப்
பூண்டிருந்து அவனுக்குப் பெருந்துணையாக நடந்து கொண்டான். பாண்டியன்
முதலாம் இராசசிம்மன் இரண்டாம் நந்திவர்மனைத் தாக்கிப் பல இடங்களில்
போர் தொடுத்து நெருக்கிக் கொண்டிருந்தபோது பல்லவ மன்னனின்
படைத்தலைவனான புகழ்பெற்ற உதயசந்திரன் பல்லவனுக்குத் துணையாகப்
போரில் நுழைந்து அவனைக் கடும் முற்றுகை ஒன்றினின்றும்
விடுவித்ததுமன்றி மேலைச் சளுக்கரையும் தொண்டை மண்டலத்தை விட்டு
விரட்டினான். இந்த

     11. Ep. Ind. XIII, p. 139.