பக்கம் எண் :

232தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்

தொண்டரடிப் பொடியாழ்வார், திருப்பாணாழ்வார், திருமங்கையாழ்வார்
என்னும் திருநாமம் சூடியவர்கள். இப் பன்னிருவரும் தமிழகத்தில் கி.பி. 500
ஆம் ஆண்டு முதல் கி.பி 800 ஆம் ஆண்டு வரையிலான ஒரு கால
அளவில் வாழ்ந்தவர்கள் என ஆய்வாளர் சிலர் கருதுவர். வைணவ சமயம்
பல்லவ நாட்டில் தோன்றிச் சோழ நாட்டில் வளர்ந்து பாண்டி நாட்டில்
மலர்ச்சியுற்றது. ஆழ்வார்களுள் பெரிதும் போற்றப்படுபவரான நம்மாழ்வார்
தென்பாண்டி நாட்டில் தோன்றியவர். ஆழ்வார்கள் பல குலத்தைச்
சார்ந்தவர்கள். நம்மாழ்வார் வேளாளர்; பெரியாழ்வார் ஸ்ரீ வைணவ
அந்தணர்; திருமங்கையாழ்வார் கள்ளர் மரபைச் சார்ந்தவர்;
திருப்பாணாழ்வார் தீண்டாதார் என்று அக்காலத்தில் கருதப்பட்ட பாணர்
குலத்தில் வந்தவர்.

     இப்பன்னிரு ஆழ்வார்களும் பாடிய பாசுரங்களும் சேர்ந்துள்ள தொகை
நூலுக்கு நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் என்று பெயர் வழங்குகின்றது.
முதலாயிரத்தில் பெரியாழ்வார், ஆண்டாள் நாச்சியார், குலசேகரப் பெருமாள்,
திருமழிசையாழ்வார், தொண்டரடிப் பொடியாழ்வார், திருப்பாணாழ்வார்,
மதுரகவியாழ்வார் ஆகியவர்களின் பாடல்கள் அடங்கியுள்ளன.
இவ்வாயிரத்துக்குத் ‘திருமொழி’ என்று பெயர். இரண்டாம் ஆயிரத்தில்
திருமங்கை யாழ்வாரின் பாசுரங்கள் மட்டும் தொகுக்கப்பட்டுள்ளன. இவ்
வாயிரத்துக்குப் ‘பெரிய திருமொழி’ என்று பெயர். மூன்றாம் ஆயிரத்தில்
பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகியவர்களின்
பாடல்களுடன் திருமழிசை யாழ்வார், நம்மாழ்வார், திருமங்கை யாழ்வார்
ஆகியவர்களுடைய பாடல்கள் சிலவும் சேர்ந்துள்ளன ; இவ்வாயிரத்துக்கு
‘இயற்பா’ என்று பெயர். நான்காம் ஆயிரத்தில் சேர்க்கப்பட்டுள்ள பாசுரங்கள்
யாவும் நம்மாழ்வார் அருளியவை. இவ் வாயிரத்துக்குத் ‘திருவாய் மொழி’
என்று பெயர்.

     வைணவக் கோயில்களில் மூர்த்தியினண்மையில் அமர்ந்து நாலாயிரப்
பிரபந்தப் பாடல்கள் பாராயணம் செய்யும் வழக்கம் உண்டு. வைணவ
மரபுக்குக் கிடைத்துள்ள உரிமையாகும் இது. இவ் வுரிமையை இன்றளவும்
சைவக் கோயில்களில் திருமுறைகள் ஓதுவதற்குப் பெறவில்லை என்பது
குறிப்பிடத்தக்கது. மூர்த்திக்கு அண்மையில் வடமொழி மந்திரங்கள்
உச்சரிப்பதும், தொலைவில் குறிப்பிட்ட இடத்துக்கப்பால் நின்று ஓதுவார்கள்
திருமுறைப் பாடல்கள் இசைப்பதும் மரபாக