| இருந்து வருகின்றது. தமிழகத்தில் ‘தென்னாடுடைய சிவன்’ கோயிலில் தமிழிசை முழங்கும் உரிமையைச் சைவ வழிபாட்டினர் பெறவில்லையா? அல்லது பெற்றிருந்த உரிமையை இழந்து விட்டார்களா? அப்படியாயின் இழந்த உரிமையை மீண்டும் பெறுவதற்கு அவர்கள் முயன்றார்களா என்பதற்கு வரலாற்றுச் சான்றான விளக்கம் கிடைக்கவில்லை. தேவார ஆசிரியர்களால் பதிகங்கள் பாடப்பெற்ற கோயில்களுக்குப் ‘பாடல் பெற்ற தலங்கள்’ என்று பெயர் வழங்குகின்றது. அக் கோயில்கள் இன்றும் மங்காத புகழுடன் விளங்கி வருகின்றன. அதைப்போலவே, ஆழ்வார்கள் ‘மங்களாசாஸனம்’ செய்த திருப்பதிகள் புகழொளி குன்றாமல் இன்றளவும் சிறப்புற்றுக் காணப்படுகின்றன. ஆழ்வார்கள் இறைவனிடத்தில் அயராத ஈடுபாடும், ஆன்மிக உறவும் பெற்றிருந்தார்கள். எனினும், மக்களிடையே வாழ்ந்திருந்து மக்கள் ஒழுக்கத்தை வளர்த்தும், திருமாலிடம் அன்பைப் பெருக்கியும் பெரும்பணி யாற்றி வைணவத்தை வளர்த்தார்கள். சைவ சமய குரவர்களைப் போன்றே ஆழ்வார்களும் சமணத்தையும் பௌத்தத்தையும் வன்மையாகக் கண்டித்து வந்தனர். ‘புலையறமாகி நின்ற புத்தொடு சமணம்’ என்றும், ‘தர்க்க சமணர்’ என்றும், ‘சாக்கியப் பேய்கள்’ என்றும் ஆழ்வார்கள் பாடியுள்ளனர். அவர்கள் பல இடங்களில் சூனிய வாதிகளையும் வெறுத்துப் பாடியுள்ளனர்.4 திருமாலின் அவதாரமானவரான கண்ணனைக் குழந்தையாகக் கொண்டு பெரியாழ்வார் பாடிய பாசுரங்கள் தமிழ் இலக்கியத்தில் ஒப்புவமை இல்லாதவையாம். ஆண்டாள் நாச்சியார் கண்ணன்மேல் பாடிய அகத்துறைப் பாடல்கள் தெவிட்டாத இனிமையும், பேரின்பப் பெருக்கும்கொண்டு திகழ்கின்றன. திருமங்கையாழ்வார் பெண் ஒருத்தி மடலூரத் துணிந்தாளெனப் பாடியுள்ளார். அவருடைய வாக்கில் அகப்பொருள் இலக்கணமே புரட்சி பெறுகின்றது. பெண்கள் மடலூரும் மரபு தமிழ் இலக்கணத்தில் காணமுடியாத தொன்றாகும். பல்லவன் மல்லையர் கோன், அபிமானதுங்கன், பருப்பதத்துக் கயல்பொறித்த பாண்டியர் குலபதி, தொண்டயர்கோன், கச்சி வயிரமேகன், பரமேச்சுரப் பல்லவன், தில்லைச் சித்திரகூடத்துக்குப் பொன்னும் மணியும் தந்தவன், திருநாங்கூர் மன்னன், கோச்செங்கணான், 4. நாலா. திவ். பிர. 2889. |