பக்கம் எண் :

பாண்டியரின் ஏற்றமும் வீழ்ச்சியும் 393

பேரரசனாக விளங்கினான். ஆனால், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர்,
புதுக்கோட்டை ஆகிய இடங்களில் ஆட்சி புரிந்து வந்த சாளுவதிம்மன்
என்கிற திருமலைதேவ மகாராசன்தான் முழுச் சுதந்திரத்துடன் கோலோச்சி
வந்தான். ஒட்டர்கள் காவேரியைக் கடந்துசென்று விசயநகரப் பேரரசின்
ஆட்சிக் கட்டுக்கோப்பைக் குலைக்காதவாறு அவன் பாதுகாப்பளித்து
வந்தான். தமிழகத்தில் அடிக்கடி சுதந்தரக் கிளர்ச்சிகள் மூண்டுவந்தன.
விசயநகரப் பேரரசின் சார்பில் சந்திரகிரியை அரசாண்டு வந்த சாளுவ
நரசிம்மன் என்பான் அக் கிளர்ச்சியைத் தன் படைபலத்தால் ஒடுக்கிக்
கொண்டே வந்தான். அவனுடைய துளுவப் படைத் தலைவனான ஈசுவரன்
காஞ்சியை முற்றுகையிட்டு, சுல்தான் மக்களிடம் கொள்ளையடித்து அங்குச்
சேர்ப்புக் கட்டி வைத்திருந்த செல்வங்களை எல்லாம் கைப்பற்றினான்.

     ஒரிஸ்ஸா மன்னன் கபிலேசுவர கஜபதியின் படையெடுப்பின் (கி.பி.
1463-64) பிறகு சாளுவ நரசிம்மனின் ஆட்சி காவேரியின் வடகரையோடு
தடைபட்டு நின்றுவிட்டது. அவனுக்குப் பின்பு விசயநகரப் பேரரசை
முறைகேடாகக் கைப்பற்றி அரசாண்ட நரச நாயக்கன், கி.பி. 1496-ல் அல்லது
அதற்குச் சற்று முன்பு தெற்கில் தண்டு கூட்டிவந்தான். அப்போது
திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர்ப் பகுதியில் விசயநகர அரசின் அலுவலனாகப்
பணியாற்றி வந்த கோனேட்டிராசன் என்பான் திருவரங்கத்து
 வைணவர்களுக்குப் பல கொடுமைகள் இழைத்து வந்தான். நரச நாயக்கன்
அவனை ஒறுத்துக் கன்னியாகுமரி வரையில் தன் ஆதிக்கத்தைப் பரப்பினான்.
சோழ சேரக் குறுநில மன்னரையும் அரசாண்டு வந்த மானபூஷணனையும்
விசயநகரப் பேரரசின் ஆணைக்குள் அடக்கினான்.

     நரசநாயக்கன் கி.பி. 1503-ல் காலமானான். அவனுக்குப் பின்
அரசுரிமைச் சூழ்ச்சிகள் பல நிகழ்ந்தன. அவனுடைய மகன் இம்மடி
நரசநாயக்கன் பட்டத்துக்கு வந்தான். விசயநகரப் பேரரசின் அரசுரிமையைப்
பெற்றிருந்தவன் சாளுவ நரசிம்மனின் மகனான இம்மடி நரசிம்மன், சிறிது
காலம் ‘அரசியல் பயிற்சியில்’ அமர்த்தப்பட்டுக் கி.பி. 1505-ல் கொலை
யுண்டிறந்தான்.

கிருஷ்ணதேவராயன் (கி.பி. 1509-29)

     அவனுக்குப் பின் நரசநாயக்கனின் மூத்த மகனான இம்மடி நரசநாயக்கன்
அரியணை யேறினான். அவனுக்கு வீரநரசிம்மன் என்றும் ஒரு பெயருண்டு.
அவன் நான்கே யாண்டுகள் ஆட்சி