சிதம்பரத்தில் இரண்டாம் குலோத்துங்கன் கோவிந்தராசப் பெருமாளின் சிலையை அகற்றிவிட்ட பிறகு முதன் முதல் அங்கு மீண்டும் ஒரு சிலையை அமைத்துக் கொடுத்த பெருமை செஞ்சியின் தலைவன் கிருஷ்ணப்ப நாயக்கனையே சாரும். சிதம்பரம் திருச்சித்திரகூடத்துக்கு இவன் பல பெரும் திருப்பணிகள் செய்தான். இவனுடைய திருப்பணிகளைத் தில்லை தீட்சிதர்கள் மிகவும் கடுமையாக எதிர்த்தார்கள். திருப்பணிகள் ஓயவில்லை. பல தீட்சிதர்கள் மகளிருடன் கோபுரத்தின் மேலேறிக் குதித்துத் தம் உயிரை மாய்த்துக் கொண்டனர். கிருஷ்ணப்ப நாயக்கனின் உள்ளம் நெகிழவில்லை. அவன் வெகுண்டு தீட்சிதர்களின்மேல் துப்பாக்கியால் சுட்டான். பல தீட்சிதர்கள் குண்டுபட்டு விழுந்தனர். வெள்ளாறு கடலுடன் கலக்கும் இடத்தில் இந்த நாயக்கன் கிருட்டிணபட்டினம் என்று ஊர் ஒன்றை அமைத்து அதில் ஜெசூட் பாதிரிகள் மாதாகோயில்கள் கட்டிக் கொள்ள உரிமை வழங்கினான். அவ்வூர் இப்போது பறங்கிப்பேட்டை என்னும் பெயரில் விளங்கி வருகின்றது. தஞ்சை நாயக்கர்கள் அச்சுதராயன் (கி.பி. 1530-42) காலத்தில் தஞ்சாவூரில் நாயக்கர் ஆட்சி ஒன்று தொடங்கிற்று. சோழ நாடு மதுரையினின்றும் பிரிக்கப்பட்டது. அச்சுதனுடைய மைத்துனியின் கணவன் செல்லப்பன் என்பவன் தஞ்சாவூரில் ஆட்சியில் அமர்த்தப்பட்டான். செல்லப்பன் முஸ்லிம் தர்க்காக்களுக்கு நிவந்தங்கள் வழங்கினான். குடிமக்களுக்குப் பாசன வசதிகள் செய்து கொடுத்தான். நாகப்பட்டினத்தில் போர்ச்சுகீசியர் குடியேறுவதற்குப் பெரிதும் துணைபுரிந்தான். அவனுடைய அரசவையில் மாதவகுரு விசயேந்திர தீர்த்தருக்கும் அப்பைய தீட்சிதருக்குமிடையே துவித அத்துவித வாதங்கள் நிகழ்ந்தன. செல்லப்பனுக்கும் அவன் மகன் இரகுநாதனுக்கும் கோவிந்ததீட்சிதர் அமைச்சராக இருந்தார். அவர் புலமை சான்றவர். அவர் தாமே ஒரு காவியத்தையும், இரகுநாதனுடன் இணைந்து இசை நூல் ஒன்றையும் இயற்றினார். மதுரை நாயக்கர்கள் மதுரையில் விசுவநாத நாயக்கன் (கி.பி 1529-64) நாயக்கர் ஆட்சியைத் தொடங்கினான். இவனுடைய தலைமை அமைச்சர் அரியநாதர் என்பவர். அவருடைய உதவியுடன் மதுரை திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி ஆகிய நகர்களைச் சீரமைத்தான். தஞ்சாவூர் பிரிந்து சென்ற பிறகு இவனுடைய ஆட்சி திருச்சிராப்பள்ளி முதல் கன்னியாகுமரி வரையிலுமான நிலப்பகுதியின் |