பக்கம் எண் :

410தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்

வந்தது என்பதை மறுக்கமுடியாது. அவன் மதுரைச் சொக்கநாத நாயக்கனுடன்
தீராப்பகை மேற்கொண்டிருந்தான். இப்பகை பெரியதொரு போராக
மூண்டுவிட்டது. சொக்கநாதன் தஞ்சாவூரை முற்றுகை யிட்டான் (1673).
விசயராகவன் போரில் இறங்கிக் கையில் பிடித்த வாளுடன் வீர மரணம்
அடைந்து தன் கோழைத்தனத்துக்குக் கழுவாய் கண்டான். தஞ்சையிலிருந்த
நாயக்க இளவரசன் செங்கமலதாசு என்பவன் விசயராகவனை யடுத்துத் தானே
அரியணை ஏறத் திட்டமிட்டான். அதற்காகப் பீஜப்பூர்ச் சுல்தான் துணையை
நாடினான். செங்கமலதாசுக்குத் துணைபுரியும் பொருட்டுப் பீஜப்பூர்ச் சுல்தான்
சிவாஜியின் மாற்றந்தாயின் மகனான வேங்காஜியின் தலைமையில் ஒரு
படையை அனுப்பிவைத்தான். வேங்காஜியும் சுல்தான் பணித்தவாறே
செங்கமலதாசுக்கு அரசை நல்கினான் (1675). ஆனால், அடுத்த ஆண்டிலேயே
தஞ்சாவூரைக் கைப்பற்றித் தானே அரசனாக முடிசூட்டிக் கொண்டான்.

மராட்டியர்கள்

     மராட்டியர்கள் முதன்முதல் தஞ்சாவூரில் அடியெடுத்து வைத்தார்கள்.
நாயக்க இளவரசன் செங்கமலதாசுக்குத் துரோகம் புரிந்த வேங்காஜி தஞ்சை
மராட்டிய அரசு பரம்பரையைத் தொடக்கிவிட்டான். அது தொடங்கிச்
சரபோஜி மன்னனின் ஆட்சிக்காலம் வரையில் மராட்டியரால் தமழகத்தைப்
பொறுத்தவரையில் நன்மை ஏதும் விளைந்ததாகத் தெரியவில்லை. விசயநகரப்
பேரரசர்களுடனும் நாயக்கர்களுடனும் ஒப்பிடும்போது மராட்டியர்கள் நாட்டில்
குழப்பமும் குடிமக்களுக்குச் சௌத் முதலிய வரித்தொல்லைகளும் வளர்த்து
விட்டனர். அவர்களுடைய காலமெல்லாம் மைசூர் ஐதருடன் போராடித் தம்
போர்த்திறனைக் காட்டிக் கொள்ளுவதிலேயே கழிந்து வந்தது. மராட்டியர்கள்
வடமொழிச் சார்புடையவர்கள். ஆதலால் தமிழகத்துக்கும் தமிழுக்கும்
நாயக்கர்கள் செய்தவற்றைப் போன்ற அழியாத கலைப்பணிகளைச் செய்யத்
தவறிவிட்டார்கள். சரபோஜி மன்னன் ஒருவன் மட்டும் அரியணையை
அணிசெய்யாமல் போயிருப்பின் தமிழகம் மராட்டியரின்
படையெடுப்புகளையும், படுகொலைகளையும் கொடிய வரிகளையுமே
சிந்தித்துக் கொண்டிருக்கும்.

     கருநாடக தேசத்தையும் சோழமண்டலத்தையும் தம் நாட்டுடன்
இணைத்துக்கொண்டு அவற்றுக்குத் தாம் பேரரசராக வேண்டும் என்ற
எண்ணமும் பேரவாவும் சிவாஜியின் இதயத்தில்