பக்கம் எண் :

தமிழகத்தில் 13 முதல் 18ஆம் நூற்றாண்டு வரை சமூகநிலை 431

பல நடுக்கங்கட் குள்ளாயிற்று. அக் காரணத்தால் தமிழில் பெரிய காவியங்கள்
ஒன்றேனும் எழவில்லை. எனினும் உரையாசிரியர்கள் பலர் தோன்றிப்
பண்டைய காப்பியங்கட்கும், தொல்காப்பியத்துக்கும் உரை கண்டனர்.
சமணர்கள் தமிழில் சிறந்த புலமை எய்தியிருந்தார்கள். அவர்களுள்
பெரும்பாலார் துறவிகளாகவேயிருந்து நூல்கள் இயற்றினராதலால் அந்
நூல்களுக்குத் தனிச் சிறப்பும் ஏற்றமும் அளிக்கப்பட்டன. கொல்லாமை,
புலால் உண்ணாமை ஆகிய ஒழுக்கங்கள் அறங்களுக்கெல்லாம் தலையாயவை
எனச் சமண முனிவர்கள் தம் இலக்கியப் படைப்புகளில் எடுத்துக்
கூறிவந்தனர். தமிழகத்தில் ‘புலால் உண்ணாதவர்கள்’ எனப் பொருள்படும்
‘சைவ மரபு’ ஒன்று வளர்ந்து வந்ததற்கு வழிகோலியவர்கள் அறங்கூறிய
சமணரேயாவர்.

     தமிழிலும் வடமொழியிலும் பல சாத்திர நூல்களும், தோத்திர
நூல்களும், புராணங்களும் இயற்றப்பட்டன. வடமொழிச் சொற்கள் விரவிய
தமிழ் உரைநடை ஒன்று உருவாயிற்று. அதற்கு ‘மணிப்பிரவாள’ நடை என்று
பெயர்.48 முத்தும் பவளமும் கலந்த கோவை போன்று அழகுடைத்து என்பர்
இந் நடையை, சமணரும் வைணவரும் இதைப் பெரிதும் கையாண்டனர்.
இதைச் சோழரின் கல்வெட்டுகளில் கையாண்டுள்ளதைக் காணலாம். ஸ்ரீ
புராணம் என்னும் சமண காவியம் மணிப்பிரவாள நடையில் ஆக்கப்பட்டது.

     வில்லிபுத்தூராரின் மகாபாரதமும், கச்சியப்ப சிவாசாரியாரின்
கந்தபுராணமும் புராணப் படைப்புகளில் மிகவும் புகழ் பெற்றவையாம்.
வேதாந்த சித்தாந்தக் கருத்துகளை விளக்கிப் பல சிறு நூல்கள் உரைநடையில்
‘கட்டளைகள்’ என்னும் தலைப்பில் எழுந்தன. சோதிடம், கணிதம், மருத்துவம்
ஆகிய துறைகளிலும் நூல்கள் இயற்றப்பட்டன.

     வடமொழியில் வியாச முனிவரால் ஆக்கப்பட்ட பாரதக் கதையைப்
பலர் தமிழில் எழுதினர் என்ற செய்தியை இலக்கியங்களின் வாயிலாகவும்,
கல்வெட்டுகளின் வாயிலாகவும் அறிகின்றோம். அந் நூல்கள் இன்று முழு
வடிவத்தில் கிடைத்தில. ஆனால், வில்லிபுத்தூராரின் பாரதம் சிதைவின்றித்
தமிழகத்தில் வழங்கி வருவது அந்நூலின் சிறப்பை எடுத்துக் காட்டுகின்றது.
வில்லிபுத்தூரார் வைணவ மரபினர் ; தென்னார்க்காட்டில் சனியூர் என்னும்
ஊரில் பிறந்தவர். வைணவ இலக்கியத்துக்கும், வைணவ சமயத்துக்கும் சிறந்த
பணியாற்றியவர். ஆதலால்,

     48. வீரசோ. அலங். 40.