| நன்கு உணர்ந்துகொண்டு தம் வாழ்க்கையைச் சீரமைத்துக் கொள்ளும் பண்புடையவர்கள் என்று வரலாறு சான்று பகர்வதை நாம் அறிவோம். நகர வாழ்க்கை, உணவு விடுதிகள், இரயில்கள், விமானங்கள், பேருந்துகள் போன்ற போக்குவரவு வசதிகள், பல்கலைக்கழக வாழ்க்கை, போர்க்கால உணவுப் பங்கீட்டு முறைகள், குழாய்த் தண்ணீர், ஆங்கில மருத்துவம், கோயில் திருவிழாக்கள் முதலியவற்றால் மக்கள் வாழ்க்கையில் மாறுதல்கள் பல அவ்வப்போது ஏற்பட்டுள்ளன. ஆனால், இன்னும் திருமணக் கலப்புகள் பெருவாரியாக நிகழவில்லை. குலம் கோத்திரம் அறிந்து பெண் கொடுத்து வாங்கலும், இயன்றவரை பழைய உறவையே நத்தி வருவதும் ஆகிய பழம் மரபுகளும் தொடர்ந்து வழக்கில் இருந்து வருகின்றன. எனினும், கலப்பு மணங்கள் ஆங்காங்கு நடைபெற்று வருகின்றன. அரிசனப் பெண்ணை மணந்துகொள்ளும் ஏனைய குலத்து ஆடவருக்குத் தமிழ்நாட்டு அரசு பல சலுகைகள் அளிக்க முனைந்துள்ளது. தமிழ்நாட்டில் மலையாளிகள், தெலுங்கர், கன்னடியர் ஆகியவர்கள் பெரும் எண்ணிக்கையில் தமிழருடன் கலந்து உறவாடி வாழ்ந்து வருகின்றனர். ஆகவே, தம்முடைய முன்னேற்றப் பாதையில் தமிழர்கள் சிறுபான்மையினரையும், பின்தங்கிய மக்களையும், உடனழைத்துக்கொண்டு மேற்செல்ல வேண்டிய பொறுப்புடையவர்களாக உள்ளனர். அவர்களுடைய நலன்களுக்கு ஊறு ஏதும் நேரிடாதவாறும், தமக்குற்ற நலன்கள் அத்தனையையும் அவர்களும் நுகருமாறும் நடந்துகொள்ளத் தமிழர்கள் கடமைப்பட்டுள்ளனர். தமிழரின் வரலாறு எடுத்துக் காட்டும் அறமும் பண்பும் இஃதேயாம். யவனருக்கு இடங்கொடுத்து, ஆரியரை வரவேற்று, முஸ்லிம்களுக்கும் ஐரோப்பியருக்கும் வாழ்க்கை நலன்களை வழங்கிப் பல மரபுகளுக்குரித்தான கலைகளைத் தமக்கும் உரிமையாக்கிக் கொண்டு, தமிழ்ப் பண்பாடுகளை உலகிற்கும் வழங்கி ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்னும் மேலாம் மனிதகுலப் பண்பாட்டைக் கைவிடாமல் தொடர்ந்து, காலங்கடந்து வளர்ந்து வருவது தமிழரின் நாகரிகமாகும். இருபதாம் நூற்றாண்டில் தமிழின் நிலை தமிழ் இலக்கியம் இருபதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம் பல துறைகளிலும் புத்துணர்ச்சி பெற்று வளர்ந்து வருகின்றது. நூல்கள் உரைநடையிலும், |