இசைக்கலை
அழகுக் கலைகளில் நான்காவது இசைக்கலை. இதனை இசைத்தமிழ்
என்றும்
கூறுவர்.
இது காதினால்
கேட்டு இன்புறத்தக்க இன்கலை. தமிழர்
வளர்த்த இயல், இசை, நாடகம்
என்னும் முத்தமிழ்களில்
இது ஒன்று.
ஆகவே, இது தமிழர் வளர்த்த கலைகளில் மிகப்
பழைமையானது.
இசைத்தமிழ் இலக்கிய நூல்களையும் இசைத்தமிழ் இலக்கண
நூல்களையும்
புலவர்கள்
பழங்காலத்திலே
எழுதியிருந்தார்கள். அவற்றில்
சில இப்போது பெயர் தெரியாமலே
மறைந்துவிட்டன; மற்றும் சில
பெயர்
மட்டும் கேட்கப்படுகின்றன.
பரிபாடல்
சங்க காலத்திலே பரிபாடல் என்னும் இசைப் பாடல்கள் பல
பாடப்பட்டிருந்தன.
பரிபாடல்கள்
இசைப்பாடல்கள் என்பதைப் பரிமேலழகர்
உரையினால் அறிகிறோம்.
‘‘பரிபாடல் என்பது இசைப்பாவாதலான்,
இஃது
இசைப்பகுப்புப் படைத்த புலவரும்
பண்ணுமிட்டெ....’’ என்று
எழுதியிருப்பதனால் அறியலாம்.1
‘‘அவையாவன, கலியும் பரிபாடலும் போலும் இசைப்பாட்டாகிய
செந்துறை
மார்க்கத்தன வென்பது’’.
இது பேராசிரியர் உரை.2
யாப்பருங்கல விருத்தியுரைகாரரும், பரிபாடல் இசைத்தமிழைச்
சேர்ந்தது என்று
கூறுகிறார்.
அவர் எழுதுவது:
1.
பரிபாடல் கடவுள் வாழ்த்து உரை, இவ்வுரைப் பகுதி மறைந்துவிட்டது.)
2.
தொல்., பொருள்., செய்யுள்., 242 உரை.)
|