106 |
தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் |
‘‘செந்துறை மார்க்கம்’’ (இசைப்பாடல்) ஆமாறு.... நாற்பெரும்
பண்ணும்
இருபத்தொரு திறனும் ஆகிய இசை எல்லாஞ் செந்துறை.... செந்துறை
என்பது பாடற்கேற்பது....
செந்துறை விரி மூவகைய: செந்துறையும்.
செந்துறைச் செந்துறையும், வெண்டுறைச் செந்துறையும் என. அவற்றுட்
செந்துறைப் பாட்டாவன: பரிபாடலும், மகிழிசையும், காமவின்னிசையும்
என்பன. என்னை?
‘‘தெய்வங் காம
மையில் பொருளாம் பரிபா டல்லே
மகிழிசை நுண்ணிசை யுரிபெரு மரபிற்
காமவின் னிசையே யாற்றிசை யிவற்றைச்
செந்துறை யென்று சேர்த்தினர் புலவர்’’
என்றாராகலின்.1
அன்றியும், இப்போது கிடைத்துள்ள இருபத்தொரு பரிபாடல்களுக்கு,
அப்பாட்டுகளைப் பாடிய புலவர் பெயர்களும், அப்பாட்டுக்குப் பண் வகுத்த
இசைப் புலவர் பெயர்களும் பண்பெயரும் எழுதப்பட்டிருப்பதனாலே,
பரிபாடல்கள் இசைப்பாடல்கள் என்பதை ஐயமற உணரலாம். இப்பரிபாடல்
இருபத்தொன்றுக்கும் பண் வகுத்த இசைப் புலவர்களின்
பெயர்களாவன:
பெட்டனாகனார், கண்ணனாகனார், மருத்துவன் நல்லச்சுதனார்,
பித்தாமத்தர்,
நாகனார், நன்னாகனார், நல்லச்சுதனார், தமிழரில் நாகர்
என்னும் பிரிவினர் பண்டைக்
காலத்தில் இருந்தார்கள். அவர்கள்
இசைப்பயிற்சியில் தேர்ந்தவர்களாயிருந்தனர்.
1. யாப்பருங்கலம், ஓழிபியல் உரை மேற்கோள்
|