பக்கம் எண் :

New Page 1
108

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்


 

 

    முதுநாரையும், முருகுருகும், களரியாவிரையுமுள்ளிட்டன
புனையப்பட்டனவென அறிகின்றோம். கடைச் சங்கத்துத் தொகுக்கப்பட்ட
தொகை நூல்களுள் ஒன்றாகிய எழுபது பரிபாடலின் ஒரு பகுதி நமக்குக்
கிடைத்துள்ளது. கிடைத்த பகுதியினை நோக்கித தமிழிசையின்
வளத்தினையும் பாடலினமைந்த விழுமிய பொருளினையுங் கண்டு
இறும்பூதெய்துகின்றோம். நமக்குக் கிடைத்த ஒரு சில பரிபாடல்களின்
நலத்தினை  நோக்கித் தலைச்சங்கத்தார் புனைந்த எண்ணிறந்த
பரிபாடல்கள் எத்துணை வளஞ் சிறந்தனவோவென வெண்ணி
உளமுருகுகின்றோம். பாடற் பின்னாகப் பாடற்றுறையும், பாடினார் பெயரும்,
பண்ணின் பெயரும், இசை வகுத்தார் பெயரும் தரப்பட்டிருக்கின்றன.
நாகனார்,   பெட்டனாகனார், நன்னாகனார், கண்ணனாகனார் என நின்ற
பெயர்களை நோக்குமிடத்து,இசை வகுத்த பாணர் நாககுலத்தினராமோ என

எண்ண வேண்டியிருக்கிறது. கேசவனார், நல்லச்சுதனார் என்போர்
பாடினோராகவும் இசை வகுத்தோராகவும் இருக்கின்றனர். இவர் தாம் வகுத்த
இசையினை ஒரு முறை பற்றி எழுதியிருத்தல் வேண்டும். அம்முறையும்,
முறை பற்றிய இசைக் குறிப்பும் நமக்குக் கிடைத்தில.’’1

 

இசைப்பாணர்

 

   பண்டைக் காலத்தில் தமிழ் நாட்டிலே இசைக்கலையில்
வல்லவராயிருந்தவர் பாணர் என்னும் இனத்தவர். சங்ககாலத்திலே
பாணர்கள், அரசர் சிற்றரசர் செல்வர் முதலியவர இல்லங்களுக்குச்
சென்று,
இசைப்பாடல் பாடினர். ஆகவே, அவர்களால போற்றப்பட்டார்கள்.
பாணருக்குப் புரவலர்கள் பொன்னையும் பொருளையும்
வழங்கினார்கள். அக்காலத்தில் சமுதாயத்திலே உயர் நிலை


1. யாழ் நூல், பாயிரவியல், பக்கம். 16.