பெற்றிருந்த பாணர், சில நூற்றாண்டுகளுக்குப்
பின்னர் தாழ்ந்த நிலையை
அடைந்து தீண்டப்படாதவர் நிலையில் தாழ்த்தப்பட்டனர்.
கி.பி.7 ஆம் 8 ஆம் 9 ஆம்
நூற்றாண்டுகளில் இருந்த பேர் பெற்ற
இசைப்பாணர்கள், திருஞான சம்பந்தருடன் இசைப்பண் வாசித்த
திருநீலகண்ட யாழ்ப்பாணரும், திருமால் அடியவரான திருப்பாணாழ்வாரும்,
வரகுண பாண்டியன் காலத்தில்
இருந்த பாணபத்திரரும் ஆவர். கி. பி.
10ஆம் நூற்றாண்டிலே இசைப்பாணர் மரபு அருகிவிட்டது.
தேவாரத் திருமுறைகளைத் தொகுத்த
நம்பியாண்டார் நம்பியும்
அபயகுலசேகர சோழமகாராசரும், அத் திருமுறைகளுக்குப் பண் அடைவு
தெரியாமல்
மயங்கிக் கடைசியில் திருஎருக்கத்தம்புலியூருக்குச் சென்றார்கள்.
ஏனென்றால், திருஎருக்கத்தம்புலியூரில்தான் திருநீலகண்ட யாழ்ப்பாணரின்
பரம்பரையினர் வாழ்ந்திருந்தனர். இவர்கள் தேவாரத்திற்குப் பண்ணடைவு
அமைக்கச் சென்றபோது, அவ்வூரில் அக்குலத்தில் இருந்தவர் ஒரு
பெண்மணியே. அவ்வம்மையார்
அமைத்துக் கொடுத்த பண்அமைப்புகளே
இப்போது தேவாரத்தில் காணப்படுகிற பண் அடைவுகள்.
சில இசை நூல்கள்
பண்டைக்
காலத்திலே இசைத்தமிழ் நூல்கள் இருந்தன என்று
கூறினோம். அவற்றை இங்கு ஆராய்வோம். இசைப்பாட்டாகிய
பரிபாடல்களையும் முதுநாரை, முதுகுருகு என்னும் நூல்களையும் முதற்
சங்ககாலத்தில் இயற்றினார்கள் என்று இறையனார் அகப்பொருள் உரை
கூறுகிறது. இவை இசைத்தமிழ் நூல்கள் என்று தெரிகின்றன.
அடியார்க்கு நல்லார், ‘‘இசைத்தமிழ் நூலாகிய பெருநாரை,
பெருங்குருகும் தேவவிருடி நாரதன் செய்த
|