பக்கம் எண் :

New Page 1
110

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்


 

பஞ்சபாரதீய முதலாவுள்ள தொன்னூல்களுமிறந்தன’’1 என்று எழுதுகிறார்.
இவர் கூறுகிற பெருநாரை பெருங்குருகும், இறையனார் அகப்பொருள் உரை
கூறுகிற முதுநாரை முதுகுருகும் ஒன்றுபோலும். இந்நூல்களைப் பற்றி வேறு
செய்திகள் தெரியவில்லை.

 

    இறையனார் அகப்பொருள் உரைப்பாயிரத்தில் சிற்றிசை, பேரிசை
என்னும் இரண்டு இசைத்தமிழ் நூல்கள் கூறப்படுகின்றன. என்னை?
‘‘அவர்களால் (கடைச்சங்கத்தாரால்) பாடப்பட்டன.... எழுபது பரிபாடலும்,
கூத்தும், வரியும், சிற்றிசையும், பேரிசையும் என்று இத்தொடக்கத்தன’’
என்று வருவது காண்க. இந்த இசைத்தமிழ் நூல்களைப் பற்றியும்
வேறு செய்திகள் தெரியவில்லை.

 

பஞ்சபாரதீயம்

 

     இந்நூலை நாரதர் என்பவர் இயற்றினார் என்றும், இந்நூல்
மறைந்துபோயிற்று  என்றும் உரையாசிரியர் அடியார்க்கு நல்லார்
கூறுகிறார்.நாரத முனிவர்வழி வந்தது தமிழ் நாட்டு இசைமரபு என்று
கூறப்படுவதும் இங்குக் கருதத்தக்கது. இந்தக் கர்ணபரம்பரை வழக்கு,  நாரத
முனிவர் தமிழில் பஞ்சபாரதீயம் என்னும் நூலை இயற்றினார்
என்பதனாலும் உறுதிப்படுகிறது. சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோவடிகளும்,
நாரதர் இசையைச் சிறப்பாகக் கூறுகிறார் என்னை?

 

    ‘‘நாரத வீணை நயந்தெரி பாடல்’’3 என்றும், ‘‘முதுமறைதேர் நாரதனார்
முந்தை முறை நரம்புளர்வார்’’ என்றும், ‘‘குயிலுவருள் நாரதனார்
கொளைபுணர்சீர் நரம்புளர்வார்’’ என்றும் கூறியது காண்க.4

 


1.   சிலப்பதிகாரம், உரைப்பாயிரம்.

2.  சிலப்பதிகாரம், உரைப்பாயிரம்.

3.  சிலம்பு., கடலாடு காதை.

4.  சிலம்பு., ஆய்ச்சியர் குரவை ஒன்றன் பகுதி.