நாரத முனிவர் வடமொழியிலும் ‘நாரத சிட்சை’ என்னும் நூல்
இயற்றினார் என்றும், அதுவும் அழிந்து
போயிற்று என்றும் கூறுவர்.
நாரதர் இயற்றிய பஞ்சபாரதீயத்திலிருந்து இசை இலக்கணச் சூத்திரம்
ஒன்றை அடியார்க்கு
நல்லார் தமது உரையில் மேற்கோள் காட்டுகிறார்.1
அச்சூத்திரம் இது:
‘‘இன்னிசை வழிய தன்றி யிசைத்தல்செம் பகைய தாகும்
சொன்னமாத் திரையி னோங்க விசைத்திடுஞ் சுருதி யார்ப்பே
மன்னிய விசைவ ராது மழுங்குதல் கூட மாகும்
நன்னுதால் சிதற வுந்த லதிர்வென நாட்டி னாரே’’
என்பதனாற் கொள்க. இது பஞ்சபாரதீயம்.’’
இசை நுணுக்கம்
இந்நூலை இறையனார் அகப்பொருள் உரையாசிரியரும், சிலப்பதிகார
உரையாசிரியர்
அடியார்க்கு நல்லாரும் குறிப்பிடுகிறார்கள். அநாகுலன்
என்னும் பாண்டியனுடைய
மகன் சயந்த குமாரன் (சார குமாரன் என்றும்
பெயர்) என்பவனுக்கு இசை கற்பிப்பதற்காக,
சிகண்டி
என்னும் முனிவர்
இந்நூலை இயற்றினார் என்று அடியார்க்கு நல்லார் கூறுகிறார்.2
இசை நுணுக்கத்திலிருந்து நான்கு செய்யுள்களை அடியார்க்கு நல்லார்
மேற்கோள்
காட்டுகிறார்.3
அவர் மேற்கோள் காட்டும் செய்யுள்களில் ஒன்று
இது:
‘‘என்னை?
1. வேனிற்
காதை, 29, 30 வரிகளின் உரை.
2. சிலம்பு.,
உரைப்பாயிரம்.
3. சிலம்பு.,
அரங்கேற்று காதை, 26ஆம் வரி உரையிலும், கடலாடு காதை., 35, 36ஆம் வரி உரையிலும்
|