பக்கம் எண் :

112
112

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்


 

    செந்துறை வெண்டுறை தேவபா ணியிரண்டும்

    வந்தன முத்தகமே வண்ணமே - கந்தருவத்

    தாற்றுவரி கானல் வரிமுரண் மண்டிலமாத்

    தோற்று மிசையிசைப்பாச் சுட்டு

 

என்றார் இசை நுணுக்கமுடைய சிகண்டியாரென்க.’’

 

பஞ்ச மரபு

 

          இந்த இசைத்தமிழ் இலக்கண நூலைச் செய்தவர் அறிவனார்
என்பவர். இந்நூலை அடியார்க்கு நல்லார் தமது உரையில்
குறிப்பிடுகிறார்.
இந்நூல் செய்யுள் ஒன்றையும் தமது உரையில்1 மேற்கோள் காட்டுகிறார்.
அச்செய்யுள் இது:

 

     ‘‘என்னை?

 

     செப்பரிய சிந்து திரிபதை சீர்ச்சவலை

    தப்பொன்று மில்லாச் சமபாத - மெய்ப்படியுஞ்

    செந்துறை வெண்டுறை தேவபாணி வண்ணமென்ப

    பைந்தொடியா யின்னிசையின் பா

 

    என்றார் பஞ்ச மரபுடைய அறிவனா ரென்னு மாசிரிய ரென்க.’’
 

பதினாறு படலம்

 

     இந்த இசைத்தமிழ் நூலைச் சிலப்பதிகார அரும்பதவுரையாசிரியர் தமது
அரும்பதவுரையில் குறிப்பிடுகிறார்; அன்றியும், இந்நூலிலிருந்து ஒரு
சூத்திரத்தையும் மேற்கோள் காட்டுகிறார்.2


1.  சிலம்பு., கடலாடு காதை, 35ஆம் வரியில் வருகிற ‘‘மாயோன் பாணி’’ என்பதன் உரை.

2.  சிலம்பு., கானல்வரி, ‘‘வார்தல் வடித்தல்......செவியினோர்த்து’’ என்பதன் அரும்பதவுரை.