பக்கம் எண் :

114
114

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்


  

       நவிர்படு குறிஞ்சி

       செந்திற நான்கும் மருதயாழ்த் திறனே.’

  

       ‘சாதாரி பியந்தை நேர்ந்த திறமே

       பெயர் திறம் யாமை யாழ்

       சாதாரி நான்கும் செவ்வழியாழ்த் திறனே’

  

என்றார் வாய்ப்பியனார்.1

  

         ‘‘இனிச் செந்துறை மார்க்கமும் வெண்டுறை மார்க்கமும் ஆமாறு:
நாற்பெரும் பண்ணும் இருபத்தொரு திறனும் ஆகிய இசையெல்லாம்
செந்துறை. ஒன்பது மேற்புறமும் பதினோராடலும் என்றிவையெல்லாம்
வெண்டுறையாகும் என்பது வாய்ப்பியம்.’’2

  

இந்திரகாளியம்

  

         இப்பெயருள்ள இசைத்தமிழ் நூலை, அடியார்க்கு நல்லார்
சிலப்பதிகார உரைப்பாயிரத்தில் கூறுகிறார். ‘‘பாரசவ முனிவரில்
யாமளேந்திரர் செய்த இந்திர காளியம்’’ என்று அவர் எழுதுகிறார். இது
அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார உரை எழுதுவதற்கு உதவியாக இருந்தது.
  

குலோத்துங்கன் இசைநூல்

        

       சோழ அரசர்களில் புகழ் பெற்றவன் குலோத்துங்க சோழன்.
இவனுக்கு விசயதரன், சயங்கொண்டான் என்னும் சிறப்புப் பெயர்களும்
உண்டு. கலிங்கப்போரை வென்றவன் இவனே. அதனால், கலிங்கத்துப் பரணி
என்னும் நூலைச் சயங்கொண்டார்
என்னும் புலவரால் பாடப்பெற்றவன்.
இவன் இசைக்கலையில் வல்லவன் என்றும், இசைத்தமிழ் நூல் ஒன்றை
இயற்றியவன் என்றும் கலிங்கத்துப் பரணி கூறுகிறது:

  


1. யாப்பருங்கலம், ஒழிபியல் உரைமேற்கோள்.

2.   யாப்பருங்கலம், ஒழிபியல், உரைமேற்கோள்.