பக்கம் எண் :

இசைக்கலை

127


 

கரடி கத்தினாற்போலும் ஓசையுடைமையால் கரடிகை என்னும் பெயர்
பெற்றது.

 

இடக்கைக்கு ஆவஞ்சி என்றும், குடுக்கை என்றும் வேறு பெயர்கள்
உண்டு. இடக்கையால் வாசிக்கப்படுதலின் இடக்கை என்றும்,
ஆவின்(பசுவின்) உடைய வஞ்சித்தோலினால் போர்க்கப்பட்டதாகலின்
ஆவஞ்சி என்றும், குடுக்கையாக அடைத்தலால் குடுக்கை என்றும் காரணப்
பெயர்கள் உண்டாயின.

 

     மத்தளம்: இதற்குத் தண்ணுமை என்றும், மிருதங்கம் என்றும்
பெயர்கள் உள்ளன.  மத்து என்பது ஓசைப் பெயர்; தளம் என்பது

இசையிடனாகிய கருவிகளுக்கெல்லாம் தளமாக இருப்பது. ஆதலால்,
மத்தளம் என்று பெயர் பெற்றது. இசைப்பாட்டிற்கு மட்டும் அல்லாமல்
கூத்து, நடனம் முதலிய ஆடல்களுக்கும் இது இன்றியமையாதது. ஆகவே,
இசைக் கருவிகளில் இது முதன்மையானது.

 

     இடக்கை: இசைப்பாட்டிற்குப் பக்கவாத்தியமாக உபயோகப்பட்டது
இக்கருவி.

 

     குடமுழா: மேலே கூறப்பட்ட தோற்கருவிகளில் ஒன்றாக இது
கூறப்பட்டது. குடமுழவாகிய கடம் (குடம்) தோற்கருவியன்று. ஆகவே,
தோற்கருவிகளில் ஒன்றாகக் கூறப்படுகிற குடமுழா என்பது, பஞ்சமுக
வாத்தியம் என்று இப்போது பெயர் கூறப்படுகிற இசைக்கருவியாகும். இது

இப்போது இசைப்பாட்டில் வாசிக்கப்படாமல் மறைந்துவிட்டது.

 

     தவுல்: இது நாகசுரத்துடன் வாசிக்கப்படுகிற தோற்கருவி.
 

     பதலை, தபலா: தபலா என்னும் தோற்கருவி இக்காலத்தில் வடஇந்திய
இசையிலும் இந்துஸ்தானி