பிற்காலத்தில் உண்டாக்கப்பட்ட இசைக்கருவி என்பதில் ஐயமில்லை.
கி.பி.17ஆம்
நூற்றாண்டில் இயற்றப்பட்ட ‘பரத சங்கிரகம்’ என்னும் நூலில்
இது கூறப்படுகிறது.
‘‘பூரிகை நாகசுரம் பொற்சின்னம் எக்காளை
தாரை நவரிசங்கு வாய்வீணை - வீரியஞ்சேர்
கொம்புதித்தி காளை குழலுடன் ஈராறும்
இன்பார் துளைக்கருவி என்’’
என்று ஒரு வெண்பா அந்நூலில் காணப்படுகிறது. இதில்தான் முதன்முதலாக
நாகசுரத்தின்
பெயர் கூறப்படுகிறது.
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த நாகூர், நாகப்பட்டினம் முதலிய
இடங்களில்
இருந்த நாகர்
என்னும் தமிழினித்தைச் சேர்ந்தவர்களால்
இக்கருவி
உண்டாக்கப்பட்டதென்றும், அதனால் இதற்கு
நாகசுரம் என்னும்
பெயர் ஏற்பட்டதென்றும்
கூறுகிறார்கள். இருக்கு முதலிய வேதத்திலிருந்து
இது உண்டாயிற்று
என்று சிலர் கதை
கட்டிவிடுவது அறியாமையாகும்.
பிற்காலத்தில் உண்டானதானாலும் நாகசுரம் சிறந்த இனிய
இசைக்கருவியாகும். இதன்
இன்னிசையில்
உருகாதார் யார்? இதற்குப்
பக்கவாத்தியமாக அமைவது தவுல் என்னும்
தோற்கருவி. இதுவும் புதிதாக
உண்டானதே.
தாரை, கொம்பு, எக்காளை முதலிய துளைக் கருவிகள் இசைப்பாட்டிற்கு
ஏற்றவையல்ல. சங்கு, மங்கல
இசைக் கருவியாகக் கருதப்படுகிறது. அது
கோயில்களிலும் வீடுகளிலும் மங்கல நாட்களில் ஊதப்படுகிறது.
கிளார்னெட்:
பிடிலைப் போன்று இதுவும் ஐரோப்பிய இசைக்கருவி
Clarionet என்று இதனை ஆங்கிலத்தில் கூறுவர்.
துளைக்கருவியைச்
சேர்ந்தது. இதனை நமது நாட்டு இசைக்கருவியாக அமைத்து முதன்முதல்
உபயோகித்தவர்
|