134 |
தமிழர் வளர்த்த
அழகுக் கலைகள் |
வித்துவான் சின்னையா பிள்ளை அவர்கள். இவர், மேல்நாட்டுப்
பிடில்
என்னும் கருவியை நமது நாட்டு இசைக்கருவியாக அமைத்துக் கொடுத்த
வித்துவான்
வடிவேலுபிள்ளையின் உடன்பிறந்தவர். அவரைப் போலவே
சின்னையா பிள்ளையும் தஞ்சாவூர் அரண்மனையில்இசைப்புலவராக
இருந்தவர். தஞ்சாவூர் அரண்மனையில் இங்கிலீஷ் பாண்டு வாசித்தபோது
அதனுடன்
வாசிக்கப்பட்ட கிளார்னெட் கருவியைப் பற்றி இவர் ஆராய்ந்து
பார்த்து, அதனைக் கற்று, நமது
நாட்டு இசைக்கருவியாக உபயோகப்
படுத்தினார். பரத நாட்டியத்துக்கு உபயோகப்பட்ட முகவீணை என்னும்
நாணற் குழாய்க் கருவிக்குப் பதிலாகக் கிளார்னெட் பயன்படுகிறது.
அன்றியும், பிடிலைப்போலவும்
புல்லாங்குழலைப் போலவும் இக்கருவியைத்
தனி இசையாகவும் வாசித்து வருகிறார்கள்.
நரம்புக் கருவிகள்: மரத்தினால் செய்யப்பட்டு நரம்புகள்
அல்லது
கம்பிகள் பூட்டப்பட்டவை. யாழ், வீணை, தம்பூரா, கோட்டுவாத்தியம், பிடில்
முதலியன
நரம்புக் கருவிகளாம்.
யாழ்: இது மிகப் பழைமையான இசைக்கருவி உலகத்திலே
பல
நாடுகளில் ஆதிகாலத்தில் இது வழங்கி வந்தது. ஒரு காலத்தில் இந்தியா
தேசம் முழுவதும் இக்கருவி வழங்கிவந்தது. வடஇந்தியாவில் யாழ்க்கருவி
வழக்கிழந்த பிறகும், தமிழ் நாட்டிலே நெடுங்காலமாகப்
போற்றப்பட்டிருந்தது. பழந்தமிழ் நூல்களிலே இக்கருவி பெரிதும்
பாராட்டிக் கூறப்படுகிறது. பழந்தமிழர்களால்
மிகச் சிறந்த இசைக்கருவியாகப்
போற்றப்பட்டது.
உருவ அமைப்பில் யாழ்க்கருவி வில் போன்றது. யாழுக்கு
வீணையென்ற பெயரும பண்டைக் காலத்தில் வழங்கிவந்தது. பழைமை
வாய்ந்ததான புத்த ஜாதகக்
கதையொன்றிலே வில்வடிவமான யாழ்க்கருவி,
வீணை
|