பக்கம் எண் :

இசைக்கலை

135


 

என்று கூறப்பட்டுள்ளது. ‘‘நாரத வீணை நயந்தெரி பாடல்’’ என்று
சிலப்பதிகாரத்திலே கூறியது இப்போது வழங்கும் வீணையை அன்று:
வில்வடிவமான யாழைத்தான் வீணை என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.

 

     யாழ் வாசிப்பதில் வல்லவரான பாணர் என்னும் மரபினர் தமிழ
நாட்டில் இருந்தனர். இவர்களுக்கு யாழ்ப்பாணர் என்பது பெயர். இவர்கள்
பண்டைக் காலத்திலே சமுதாயத்தில் உயர்நிலையில் இருந்தவர்கள். அரசர்,

செல்வர் முதலியவர்களின் அரண்மனையில் யாழ்வாசித்தும், இசை பாடியும்

தொழில் புரிந்தவர். இப்பொழுது இலங்கையின் வடபகுதியாக யாழ்ப்பாணம்
என்னும் ஊர், பண்டைக் காலத்திலே, இசைப்புலமை வாய்ந்த யாழ்ப்பாணன்
ஒருவனுக்கு ஓர் அரசனால் பரிசாக வழங்கப்பட்டதென்றும், யாழ்ப்பாணன்
பரிசாகப் பெற்றபடியால் அவ்வூருக்கு யாழ்ப்பாணம் என்னும் பெயர்
ஏற்பட்டது என்றும் கூறுவர்.

 

     பண்டைத் தமிழகத்தில் யாழும் குழலும் சிறந்த இசைக்கருவிகளாக
வழங்கிவந்தபடியினாலேதான் திருவள்ளுவரும், ‘‘குழல் இனிது யாழ் இனிது’’
என்று கூறினார். பலவிதமான யாழ்க்கருவிகளைப் பற்றியும், அக்கருவியைப்
பற்றிய செய்திகளையும் சிலப்பதிகாரத்திலும், அதற்கு அடியார்க்கு நல்லார்
எழுதிய உரையிலும் விரிவாகக் காணலாம்; அன்றியும் முத்தமிழ்ப்
பேராசிரியர் உயர்திரு. விபுலாநந்த அடிகளார் இயற்றிய யாழ் நூலிலும்
காணலாம்.

 

     யாழ் வாசித்து இசை பாடுவதில் வல்லவரான பாணர் என்னும்
மரபினர் பிற்காலத்தில் அருகிவிட்டனர். திருஞானசம்பந்தர் இருந்த
கி.பி.7ஆம் நூற்றாண்டிலே பேர்பெற்ற யாழாசிரியர் ஆக இருந்தவர்
திருநீலகண்ட யாழ்ப்பாணர். அவருக்குப் பிறகு 9 ஆம்
நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்தவர், பாணபத்திரர் என்பவர், யாழ்
வாசிப்பதிலும் இசை பாடுவதிலும் வல்லவரான இவர்