136 |
தமிழர் வளர்த்த
அழகுக் கலைகள் |
முதலில் வரகுண பாண்டியனுடைய அவையில் இசைப்புலவராக இருந்தார்.
பிறகு
மதுரைச் சொக்கநாதர் ஆலயத்தில் யாழ் வாசித்துக் கொண்டிருந்தார்.
இவருடைய யாழ் இசைக்கு மனமுருகிய சொக்கப் பெருமான், இவருக்குப்
பெரும் பொருள் கொடுத்து அனுப்பும்படி தமது அடியாராகிய
சேர நாட்டை
அரசாண்ட சேரமான் பெருமாள் நாயனாருக்குத் திருமுகச் சீட்டு
எழுதியனுப்பினார் என்றும்,
அதன்படியே சேரமான் பெருமாள் இவருக்குப்
பெருநிதி கொடுத்து அனுப்பினார் என்றும் திருவிளையாடற்புராணம்
கூறுகிறது.1
பாணபத்திரர் காலத்தில், மதுரைக்கு வடக்கேயுள்ள சோழநாட்டில்
இருந்த புகழ்பெற்ற யாழ்ப்பாணன் ஏமநாதன் என்பவன். ஏமநாதன் தன்
சீடர்களோடு மதுரைக்கு வந்து, பாண்டியனிடம் சிறப்புகள் பெற்றுப்
பாணபத்திரனுடன் இசைவெற்றி கொள்ள எண்ணினான். அப்போது,
சொக்கநாதரே பாணபத்திரனுடைய மாணவன்போன்று வந்து, ஏமநாதன்
முன்பு இசை பாடி, அவனை மதுரையைவிட்டு
ஓடச்செய்தார் என்று
திருவிளையாடற் புராணம் கூறுகிறது.2
வைணவ அடியார்களில் ஒருவரான திருப்பாணாழ்வாரும் யாழ்
வாசிப்பதிலும்
இசை பாடுவதிலும் வல்லவராக இருந்தார்.
கி.பி.11ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு, யாழ் தமிழ் நாட்டில்
வழக்கொழிந்துவிட்டது.அதற்குப் பதிலாக இப்போது வழங்குகிற வீணை
என்னும் இசைக்கருவி வழங்கலாயிற்று.
வீணை: வில்வடிவம் உள்ள பழைய இசைக்கருவியாகிய யாழிற்கு
வீணை என்னும் பெயரும் வழங்கி வந்தது. அந்தப்
1.
திருமுகங் கொடுத்த படலம்.
2.
விறகு விற்ற படலம்
|