பெயரே இப்போது வழக்கில் இருந்து வருகிற வீணைக்கும் பெயராக
அமைந்துவிட்டது.
வீணை என்னும் கருவி கி.பி.7ஆம் நூற்றாண்டிலிருந்து
தமிழ் நாட்டில் வழங்கி வருகிறது
என்று கருதலாம். யாழ், கி.பி.11ஆம்
நூற்றாண்டிற்குப் பிறகு வழக்கிழந்துவிட, வீணை
இன்றும் நிலை
பெற்றிருக்கிறது. மாணிக்கவாசக சுவாமிகள் காலத்தில், யாழ், வீணை ஆகிய
இரண்டு இசைக்கருவிகளும் வழங்கிவந்தன போலும். ஆகையினால்தான்,
அவர் ‘‘இன்னிசை
வீணையர் யாழினர் ஒருபால், இருக்கொடு தோத்திரம்
இயம்பினர் ஒரு பால்’’ என்று
இரண்டினையும்
கூறினார். இப்போது வீணை
சிறந்த இசைக்கருவியாக விளங்குகிறது.
கோட்டுவாத்தியம்: இது பிற்காலத்தில் உண்டானது. ஆனால்,
வீணைபோன்று
அவ்வளவு சிறந்ததல்ல. வீணைக்கு இரண்டாவதாகவே இது
கருதப்படுகிறது.
தம்பூரா: இது சுருதிக்குப் பயன்படுகிறது.
பிடில்: இது மேல்நாட்டு இசைக்கருவி. இதற்கு வயலின் (Violin)
என்றும், பிடில் (Fiddle) என்றும் ஆங்கிலத்தில்
பெயர் கூறுவர். இப்போது
இது நமது நாட்டு இசைக் கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது. ஐரோப்பிய
இசைக்கருவியாகிய இதனை, நம் நாட்டு இசைக்கருவியாக முதன் முதல்
அமைத்தவர் வித்துவான்
வடிவேலுபிள்ளை அவர்கள்.
இவர் ஏறக்குறைய நூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்தவர். தலைக்கோல்
ஆசான் (நட்டுவர்) ஆகிய இவர், தஞ்சாவூர்
மகாராட்டிர அரசர்
சமஸ்தானத்தில் அரண்மனை வித்துவானாக இருந்தார். ஒரு சமயம்
அரண்மனையில்
இங்கிலீஷ் பாண்டு வாசிக்கப்பட்டபோது அதனுடன்
பிடிலும் வாசிக்கப்பட்டதை இவர் ஊன்றிக் கவனித்தார்.
பிறகு, பிடிலைத்
தமிழ் இசைக்குப் பயன்படுத்தலாம் என்று கண்டார். ஆகவே, அதனைக்
கற்று அதை
வாசிப்பதில்
|